என் காதலி சீன் போடுறா

சங்கர் மூவீஸ் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்க,  

அங்காடிதெரு மகேஷ் –  புதுமுகம்  ஷாலு  இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா,  விஜய் டிவி.கோகுல் ஆகியோர் நடிக்க ,  

ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கிய   ராம்ஷேவா  கதை, திரைக்கதை, வசனம், எழுதி     இயக்கும் படம்   “ என் காதலி சீன் போடுறா “ 

ஒளிப்பதிவு           –        வெங்கட்

இசை           –        அம்ரீஷ்

பாடல்கள்    –        ராம்சேவா ,ஏகாதசி கலை           –        அன்பு

நடனம்        –        சாண்டி, T.முருகேஷ்

ஸ்டன்ட்      –        மிரட்டல் செல்வா

எடிட்டிங்     –        மாரி

தயாரிப்பு மேற்பார்வை –        தண்டபாணி

படத்தின் பூஜையில் அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். “இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள்தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.

 இந்த வகையில்  நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தின்  கதை உருவாக்கப் பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை  சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.

படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது” என்கிறார் இயக்குனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *