4D ஒலியில் 3D படமாக வரும் 2.O – KrishnaTvOnline.Com

4D ஒலியில் 3D படமாக வரும் 2.O

நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளிவர இருக்கும் 2.O படத்தில்முன்னோட்ட வெளியீட்டு விழா !
 
 தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3D யில் பிரம்மாண்டமாக இருந்தது முன்னோட்டம் . தமிழ்ப் பாடல் ஒன்றும் திரையிடப்பட்டது . ஷங்கர் – ரஜினி மேஜிக் !
அது என்ன 4Dஒலி? 
 
“அகலம் நீளம் பக்க வாட்டு மட்டும் அல்லாது தரை வழியாகவும் ஒலி வரும் அதுதான் 4Dஒலி” என்றார் ஷங்கர் .”
 
தொடர்ந்து , “2.O திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர் .உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி.நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது முடிந்தவரை இந்த படத்தை 4Dஒலியில் 3D படமாக பாருங்கள் .
 
அதற்கு ஏற்ப திரையரங்குகளையும் தயார் செய்யுங்கள் . அப்போதுதான் எங்கள் உழைப்பை முழுக்க அனுபவித்து உணர முடியும்” என்றார் ஷங்கர் 
 
எமி ஜாக்சன்,
”  இந்திய சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி .வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி “என்றார் 
 
கலை இயக்குனர் முத்துராஜ்  ” மிகவும் சந்தோசமாக உள்ளது, ரஜினி சார் ரசிகனாக இருந்து அவர் படத்துலயே வேலை பார்ப்பது.
ஷங்கர் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்களுக்கும்,படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”என்றார் 
 
 சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி பேசியவை ” இவ்வளவு பெரிய படத்தில் பணிபுரிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது.
இயக்குனர் ஷங்கர் ,ரஜினி சார்,அக்சய் சார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும் .
 
இதை தமிழ்ப் படம் என்று சொல்லாதீர்கள் . இது இந்தியப் படம்.4Dஒலியை உலகத்துக்கே முதன் முதலாக வழங்குகிறோம்” என்றார் 
 
 படத்தொகுப்பாளர் ஆன்டனி, 
” வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கும் சுபாஷ்கரன் அவர்களுக்கும் நன்றி.
 
இந்திய சினிமாவில் மிகப்பெரிய படம்.அனைவருக்கும் நன்றி ” என்றார் .
 
விஷுவல் எபெக்ட்ஸ்  ஸ்ரீநிவாச மூர்த்தி,  
 
” இப்படத்தில் நிறைய  டெக்னாலஜி பயன்படுத்தி உள்ளோம்.எனது டீம் முழு ஒத்துழைப்பு இதற்கு காரணம்.
 
மிகவும் அருமையாக vfx வந்துள்ளது.படத்தில் வாய்ப்பளித்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி.மூன்று வருடத்திற்கு மேலான உழைப்பு இப்படம் ” என்றார்  
“படத்துக்கு எல்லோரும் ஆதரவு வழங்க வேண்டும் ” என்றார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா . 
“ஐந்து படத்துக்கு செய்ய வேண்டிய வேலையை இந்த ஒரு படத்தில் செய்து இருக்கிறேன் ” என்று துவங்கிய ஏ ஆர் ரகுமான் ,
” ஸ்பெஷல் எபெக்ட்ஸ் முடிந்த பிறகு பார்த்தால் பின்னணி இசை போதவில்லை . எனவே திரும்ப ஒருமுறை செய்தேன்.
 
ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவரது கடின உழைப்பு இந்த வயதிலும் கூட.அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் ” என்றார் . 
“ஷங்கர் போன்ற ஒரு மேதையின் இயக்கத்தில் ரஜினியோடு நடித்தது எனக்கு ரொம்பப் பெருமை .
 
என் கேரியரில் இது முக்கியமான படம்உங்கள் அன்பிற்கு நன்றி . ” என்றார் அக்ஷய் குமார் 
 
ரஜினி தனது பேச்சில் ,
“ஷங்கர் ஓர் இயக்குனர், விஞ்ஞானி, மேதை, மந்திரவாதி , ஷோ மேன் .
 
இந்தப் படம் அவரது சாதனை ” என்று  தேசி ய ஊடகங்களுக்காக ஆங்கிலத்தில் பேசி விட்டு தமிழுக்கு வந்தார் . 
 
“படம் வேலை நடந்த போது எனக்கு உடம்பு சரி இல்லாமல் போய் விட்டது . நான் ஷங்கரிடம் ‘ நான் வாங்கிய சம்பளம் மட்டுமல்லாது, 
இதுவரை படப்பிடிப்புக்கு ஆனா செலவு முழுவதையும் கொடுத்து விடுகிறேன் வேறு யாரையும் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் ” என்றேன் .
 
அவரோ , ‘இல்லை சார்… நீங்கள் இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்க முடியாது .  உங்கள் வசதிக்கு செய்து கொள்ளலாம் ” என்றார் . 
அப்படியும் மீண்டும் உடல் நிலை சரி இல்லாமல் போனது . நான் தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் ‘ 40 நாள் ஒய்வு வேண்டும் என்றேன் .
 
“40 நாள்  என்ன ? நாலு வருடம் கூட எடுத்துக் கொள்ளுங்கள் . நீங்கள் வரும்போது வைத்துக் கொள்வோம் ‘ என்றார் . மறக்க மாட்டேன் 
 
முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜெட்டில் துவங்கியது.கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது.
 
கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும்.ஆனால் தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியது.
 
எப்போது வரணும்  என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரணும் .
வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது. ஹிட் ஆக்குவதுதான் பாக்கி..” என்றார் . 
 
படத்தின்  வெற்றிக்கு தனது வாழ்த்துகக்களை தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன் . 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *