SRMIST organized a lecture under the banner “Paarivendhar Lecture Series” – Press Release

எஸ்‌.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம்
எஸ்‌.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பாரிவேந்தர் லக்ச்சர் சீரிஸ் என்ற சிறப்பு கருத்தரங்கத்தில் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி கலந்து கொண்டு need for India centric development model என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார். பின்னர் சிறப்புரை வழங்கிய குருமூர்த்தி அவர்கள் தன்னுடைய பயண அனுப்புங்கள் மற்றும் கார்ல் மார்க்ஸ், வெப்பர் ரோஸ்டர் போன்றோர்களின் தத்துவங்களை மேற்கோள் காட்டி பேசினார். மேலும் எல்லா கல்வி நிறுவனங்களும் மாணவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர மதிப்பெண்களை நோக்கமாக கொண்டு வளர்க்க கூடாது. மேலும் நாட்டின் முக்கிய வர்த்தக மையங்கள் மற்றும் தொழில் முனைவோர் குறித்து விளக்கினார். நாட்டில் உள்ள கிராமங்கள் தான் சிறந்த தொழில் முனையும் இடம் என்றார் எடுத்து காட்டாக ஜோகோ நிறுவனத்தை கூறினார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மேலாண்மை புலத்தின் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி தன் உரையை நிறைவு செய்தார்.
இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்செட்டி, இணை துணை வேந்தர் முனைவர் தி.பொ.கணேசன் , வெளியுறவு பிரிவு இணை துணை வேந்தர் முனைவர் இர. பாலசுப்பிரமணியன் , பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சேதுராமன் , மேலாண்மை குழு உறுப்பினர் திரு ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புலத்தலைவர் டாக்டர் பொன்னையா நன்றியுரை வழங்கினார் மற்றும் பேராசிரியர் ஸ்ரிதர் கிருஷ்ணசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *