சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளியை தத்தெடுத்த 100 Dwaar (100 கதவுகள்)

சென்னை ஆர்.ஓ.ஸி யில்  பதிவு செய்யப்பட்ட 100 Dwaar (100 கதவு கள்)சமூக நலன்புரி கூட்டமைப்பு-எனப்படும் என்.ஜி.ஓ. நிறுவனத்தின் இயக்குநர்கள், சென்னைசமூக நலன் புரி நடவடிக்கைகளுக்காக ஒருபள்ளியைத் தத்தெடுக்க முடிவு செய்தனர்.
எனவே இந்த நிறுவனம் இந்த சமூக மேம்பாட்டு பணிக்காக ஜாபர்கான் பேட்டையில் உள்ள “சென்னைஉயர்நிலைப்பள்ளி” என்ற
மாநகராட்சி உயர்நிலை பள்ளியை தேர்வு செய்து கொண்டது

த பள்ளியானது1990 ஆம் ஆண்டுதொடங்கப்பட்டது. இந்த பள்ளியின்மாணவர் எண்ணிக்கை ஏறக்குறைய 600. இதில் முதன்மைபள்ளியைச் சேர்ந்த 300 மாணவர்கள் அடங்குவர். 2015-ஆண்டு இந்தப் பகுதியில் பாய்ந்த வெள்ளத்தில், பள்ளியில்வைத்திருக்கும் ஆர்.ஓ ஆலை முற்றிலும் சேதமடைந்து விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக,குடிநீர் இல்லாத நிலை உருவாகி,   மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

 

 

தற்போதுள்ள பழுதடைந்த ஆர்.ஓ.ஆலையைப் பழுது பார்த்து புனரமைப்பு செய்ய பள்ளி அதிகாரிகள்எங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போதுள்ள ஆர்.ஓ ஆலையை ஆய்வு செய்த பின்னர், ஒரு மணிநேரத்திற்கு 250 லிட்டர் தூய குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய RO ஆலை
ஒன்றை நிறுவ முடிவு செய்யப்பட்டது. புதிய RO ஆலைக்கு ஆலை உற்பத்தியாளரிடம் ஆர்டர் வழங்கப் பட்டது.  ஆலை  உற்பத்தியாளர், ஏற்கனவே இருக்கும் பழுதானஆலையை அகற்றிவிட்டு, புதிய ஆர்.ஓ ஆலையை கட்டமைத்து இயங்க வைத்தனர். தற்போது புதிய ஆலை மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீரை வழங்கிவருகிறது.

இந்த புதிய ஆர்.ஓ நீர் ஆலையை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா கடந்த மார்ச் 22, 2019 அன்று மதியம் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் யாவரும் திரளாக விழாவில் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் பழைய மாணவரான திரு ஜி. புஷ்பராஜ் , போலீஸ் ஆய்வாளர் அவர்கள், விழாவை துவக்கி வைத்தார்.

100 கதவுகள் சமூக நலன்புரி கூட்டமைப்பின் இயக்குநர்கள், டாக்டர் மணிமாறன் சோழன் (குவைத் )மற்றும் கே.என்.செந்தில்வேல் இருவரும்
இந்த தொடக்கவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *