“சீயான்கள் ” மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது,

சீயான்கள்
 
மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான். குழந்தையை போன்ற ஒரு அப்பாவியான தன்மை மற்றும் சந்தோஷமான இயல்புகள் எப்போதும் தனது ராஜ்யத்தில் மனிதர்களை வரவேற்க தயாராக உள்ளன. அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது. சீயான்கள் அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதை. தூய்மையான மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களை கொண்டு சொர்க்கம் போன்ற ஒரு பின்னணியில் தயாராக உள்ளது. இதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள அழகான ஒரு சில கிராமங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் 
இயக்குனர் வைகறை பாலன். 
 
இது குறித்து இயக்குனர் வைகறை பாலன் கூறும்போது, “நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம், மேலும் அவர்கள் அனைவருக்கும் நீண்ட காலத்திற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 4 அல்லது 5 பிரபலமான முகங்கள் தவிர, அவர்கள் அனைவரும் புதியவர்கள். தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் படம் எடுத்தோம். அத்தகைய நீண்ட தூரத்துக்கு நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது, தினமும் 2- முதல் 3 மணி நேரம் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது” என்றார்.
 
படத்தின் தலைப்பு “சீயான்கள்” மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில், “சீயான் என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்” என்றார்.
 
KL ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரித்துள்ள இந்த படம் 70 நாட்களில் படம் பிடிக்கப்பட்டு, தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. I.E.பாபுகுமார் (ஜீரோ புகழ்) ஒளிப்பதிவு செய்ய, மப்பு ஜோதி பிரகாஷ் (கொடி புகழ்) படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *