SRMJEEE results and B.Tech Common Counselling information

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் பி.டெக் பொது கலந்தாய்வு மே 3 முதல் 7 வரை நடைபெறும்.

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பொறியியல் படிப்பிற்காக பொது நுழைவு தேர்வை நடத்தி அதன் முடிவுகள் அண்மையில் வெளிவந்தன அதில் முதல் இடத்தை தமிழ்நாட்டை சேர்ந்த கே.வி. விக்ரம் என்ற மாணவரும் , இரண்டாம் இடத்தை உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஹர்ஷித்கேடியே மற்றும் மூன்றாம் இடத்தை ஆந்திராவை சேர்ந்த மாணவர் பாலரத்தன சாமியும் பிடித்தனர்.

எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் பொறியியல் கலந்தாய்வு மே 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நுழைவு தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவர்கள் இந்த பொது கலந்தாய்வின் மூலம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம். இந்த பொது கலந்தாய்வை ஹரியானாவில் உள்ள சோனேபெட் , காசியாபாத்தில் உள்ள மோடி நகர் , ஆந்திர அமராவதி , சென்னையில் உள்ள இராமாபுரம் ,வடபழனி மற்றும் காட்டாங்குளத்தூர் ஆகிய பகுதிகளில் சென்று கலந்து கொள்ளலாம். கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஏதுவாக வங்கி கடன் உதவிகள் மற்றும் இதர உதவிகளை பெற www.srmuniv.ac.in .
இந்தக் கலந்தாய்வில் பல்கலைக் கழகத்தின் நிறுவன வேந்தர் முதல் 100 இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நிறுவனர் ஸ்காலர்ஷிப் மூலம் முழு இலவச உயர் கல்வி பெறும் வகையில் ஸ்காலர்ஷுப்கள் வழங்கபடும் . இந்தக் கலந்தாய்வில் 101 முதல் 3000 வரை இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 100 முதல் 25 சதவீதம் வரையிலான கல்விக் கட்டணச் சலுகைகள் முதல் நாள் கலந்தாய்வில் மூலம் வழங்கப்படும். முதல் நாள் கலந்தாய்வை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் சிறப்பு சலுகைகளை வழங்குவார் .
விளையாட்டு , கலை மற்றும் பண்பாடு முன்னாள் மாணவர்களின் பிள்ளைகள் மற்றும் SRM பணியாளர்களின் பிள்ளைகள் , சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்படும்.
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நுழைவுத்தேர்வு கணினி மூலம் எழுதப்படும் தேர்வு 123 நகரங்களில் மற்றும் 5 மத்திய கிழக்கு நகரங்களிலும் ஏப்ரல் 15 முதல் 25 வரை நடத்தப்பட்டது .
இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளின் மூலம் இதன் பன்முகத்தன்மை அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு ,ஆந்திர பிரதேசம் ,தெலங்கானா உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர் மற்றும் 310 மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்தும் 150 மாணவர்கள் வடகிழக்குப் பகுதியில் இருந்தும் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *