அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தனிக் கட்சி துவங்கும்

சென்னையில் உள்ள அம்பிகா empire தனியார் விடுதியில் அதிமுகவின் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தனிக் கட்சி துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

 

இவர் 1991 லிருந்து 1996 வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்….

இந்தக் கட்சிக்கு திராவிட முற்போக்கு மக்கள் கட்சி என்று பெயரிட்டு அவர்களது கொடியை அறிமுகப்படுத்தினர்….. மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும் மத்தியில் ஆளும் கட்சிக்கும் தாங்கள் ஆதரவு கொடுத்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம் என இந்த கட்சியின் நிறுவனர் ஸ்ரீதரன் கூறினார்……எங்கள் கட்சியின் முதலான கோரிக்கையாக இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும்…..சாதியின் அடிப்படையில் இருக்க கூடாது என்பது எங்களது முதலான கோரிக்கை என்று கூறினார்..

நான் 1985 யில் இருந்த அதிமுகவில் இருக்கிறேன் அதிமுகவில் இருப்பதனால் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை அதனால் தனி கட்சி தொடங்கி உள்ளேன் .

இந்திய இறையாண்மையை காத்திடவும், சமூக நல்லிணக்கம், சமூக பொருளாதார வளர்ச்சி கண்டிட, பொருளாதார அறிவியல் முறையை பின்பற்றி கிராம வளர்ச்சிக்கும், விவசாயம் கல்வி மேம்பாட்டிற்கு மேம்படுவதற்கான அவசியத்தையும், யதார்த்தத்தையும், மேலும் மருத்துவத்துறையில் அனைவருக்கும் சமமான மருத்துவ சிகிச்சை கிடைக்க பாடுபட போவதாகவும் கூறினார்,

அரசியலில் மூத்த தலைவரும் முன்னாள் அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சருமான திரு அரங்கநாயகம் திராவிட முற்போக்கு மக்கள் கட்சி குறுந்தகுடை வெளியீட்டு பேசுகையில் திராவிட முற்போக்கு மக்கள் கட்சி மேற்சொன்ன பழமைவாய்ந்த உட்கட்சி ஜனநாயகம் பற்றி தகுதி வாய்ந்தவர்களுக்கு தகுதி திறமை படிப்பு அறிவு சுய ஒழுக்கம் சமூக சேவை பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு பொறுப்புகளும் பதவிகளும் ஒழுங்கு நடவடிக்கைகள் கட்சி விதிகளின்படி செயல்படுத்தும்,

திராவிட முற்போக்கு மக்கள் கட்சி மக்கள் நலப் பணிகளில் தொலைநோக்குப் பார்வையில் முற்போக்குச் சிந்தனையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கை கோட்பாட்டின் வழியில் அரசியல் பயணம் செய்யும்,

திரு ஸ்ரீதர் அவர்கள் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களிடம் நன்கு பழகி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர், மக்களுக்கு எப்பொழுது என்ன வேண்டுமென்று தெரிந்து கொண்டவர்,அரசியல் தலைவர்களுடன் நன்கு பழக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் இவர் அரசியல் பயணம் கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்,

இந்த நிகழ்ச்சியில் சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *