சென்னையில் கல்வி கண்காட்சியை நடத்தியது, ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக சிங்கப்பூர் வளாகம்!

சென்னையில் கல்வி கண்காட்சியை நடத்தியது, ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக சிங்கப்பூர் வளாகம்!

ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகிய ஜேம்ஸ் குக் பல்கலை. (James Cook University) சிங்கப்பூரில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இன்று (மே 10 2019) இலவச கல்விக் கண்காட்சியை நடத்தியது.

 

கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் அங்கிருந்தே வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி மூலம் இந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசி, தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்றனர். சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக் கழகங்களின் வரிசையில், முன்னணி 2 சதவீத பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்த ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகமும் இடம் பிடித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம், கடந்த 2003-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தனது கிளையைத் தொடங்கியது. வணிகம், தகவல் தொழில்நுட்பம், உளவியல், கல்வி, கணக்கு பதிவியல், கலை, மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழலியல், விளையாட்டு வடிவமைப்பு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற பல துறைகளில் கல்வி கற்க இந்நிறுவனம் வாய்ப்புகளை வழங்குகிறது.

சென்னையில் நடந்த இந்த இலவசக் கல்விக் கண்காட்சியில் தலைமை உரையாற்றிய இந்தப் பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் மைய உதவி துணைவேந்தர் பேராசிரியர் திரு. கிரிஸ் ரூட் (Mr.Chris Rudd), “எங்களது இந்த முயற்சிக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் முறையை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் – எங்களது சிங்கப்பூர் மையத்தில் கல்வி கற்க ஆர்வமாக உள்ள சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் இதன் மூலம் மிக எளிதாக எங்களது பேராசிரியர்களோடு நேருக்கு நேர் பேசி தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுதான். அதோடு எங்களது வளாகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் இங்கிருந்தே பார்த்து தெரிந்து கொள்வதே ஆகும்” என தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க, இந்தக் கண்காட்சியில் பங்கேற்று, அன்றைய தினமே இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 250 சிங்கப்பூர் டாலர் (தோராயமாக ரூ. 12,750) அளவுக்கு சலுகை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கியது.

இக்கண்காட்சியைத் தொடர்ந்து, ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் நகர வடிவமைப்பு துறையின் முதுநிலை பட்டப்படிப்பு குறித்த சொற்பொழிவுக்கும், பயிலரங்குக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைக்கு கடும் சிக்கல்கள் நிறைந்ததாக மாறிவரும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பங்கேற்பவர்களுக்கு, மேற்கண்ட முதுநிலை பாடத்திட்டம் மிகச் சரியான தீர்வு மட்டுமல்ல; அத்தியாவசிய தேவையும் கூட. இதோடு, இன்றைய சர்வதேசச் சூழலைக் கருத்தில் கொண்டால், திட்டமிடல் மற்றும் நகர வடிவமைப்பு குறித்த அறிவு பல நிலைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இப்பல்கலை குறித்த கூடுதல் தகவல்களுக்கு: +91 9884060706, +91 9884430735, 044 4218 7003, 044 2442 2202.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *