Re: First Deceased Donor Liver Transplant Done at SRM Hospital, Kattankulathur –

 எஸ் அர்எம் மருத்துவமனையில் நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதன்முதலாக வெற்றிகரமாக செய்யப்பட்டது


போதை பழக்கத்தினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட 46 வயதுடைய நோயாளிக்கு எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த நோயாளி நலமுடன் உள்ளார்.ஏற்கனவே சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் வெற்றிக் கண்டு இப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் வெற்றி கண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவ சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தரமான  மருத்துவ சுகாதார சேவை ஆற்றி வருகிறது.மருத்துவ சேவையுடன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறது. தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வகையில்  சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையுடன் எஸ்ஆர்எம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதனை தொடர்ந்து போதை பழக்கத்தினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 46 வயதுடைய நபருக்கு கல்லீரல் தானம் பெற்று  எஸ்ஆர்எம் மருத்துவமனையில்   குளோபல் மருத்துவமனையுடன் இனைந்து லிவர் மாற்று அறுவை சிகிச்சை சுமார்  6 மணிநேரம் நடத்தப்பட் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது . இந்த லிவர் மாற்று அறுவை சிகிச்சை பற்றி சென்னை குளோபல் மருத்துவமனை லிவர் மாற்று அறுவைசிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் விவேக் விஜய் எஸ்ஆர்எம் மருத்துவமனை கல்லீரல் மருத்துவதுறை பிரிவு இயக்குநர் ஜாய் வர்க்கீஸ் ஆகியோர் லிவர் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதின் மூலம் அந்த நபர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்றார்.

இது சம்மந்தமாக எஸ்ஆர்எம் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குதல் அலுவலர் ராம் நடேசன் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரம் கூறியதாவது எஸ் ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  சென்னை குளோபல் மருத்துவனையுடன் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இந்த மருத்துவமனையில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு செய்யப்பட்டு வருகின்றன.இப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இத்தகைய மாற்று அறுவை சிகிச்சைகளை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்ட  நோயாளிகள் தங்களை இந்த மருத்துமனையில் அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *