எஸ்.ஆர் எம் மாணவர்கள் மை இல்லா பிரிண்டிங் தொழில்நுட்ப புதிய ஆப்ஸ் வடிவமைத்து சாதனை- ரூ.5 லட்சம் பரிசு தொகை பெற்றனர்

எஸ்.ஆர் எம் மாணவர்கள் மை இல்லா பிரிண்டிங் தொழில்நுட்ப புதிய ஆப்ஸ் வடிவமைத்து சாதனை- ரூ.5 லட்சம் பரிசு தொகை பெற்றனர்


தேசிய அளவில் நடைபெற்ற புதிய வடிவமைப்பு மற்றும் உருவாக்குதல் தொழில்நுட்ப போட்டியில் எஸ்ஆர்எம மாணவர்கள் மை இல்லாத புதிய பிரிண்டிங்  பயன்பாட்டு தொழில்நுட்பத்தினை ( ஆப்ஸ் )உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதற்காக அவர்கள் ரூ.5 லட்சம் ரொக்க பரிசு தொகை பெற்றனர்.பரிசு தொகையினை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் பேராசிரியர் அணில் தத்ரேயா சகரஸ்புத்தே வழங்கினார். சாதனை படைத்த மாணவர்களை எஸ்ஆர்எம் கல்வி நிர்வாகம் பாராட்டியுள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேசிய அளவிலான கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு போட்டியினை   .டெக்சாஸ் இன்ஸ்ரூமெண்ட்ஸ் நிறுவனம்,மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை, பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனம், மை கவர்ன் இந்தியா ஆகியவை இணைந்து  நடத்தின.

இதில் நாடு முழுவதிலுமிருந்து1,750 கல்லூரிகளை சேர்ந்த 26 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இவர்கள் ஆன் லைன் முறையில் தங்களின் கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு பற்றிய சுமார் 10 ஆயிரம் ஆராய்ச்சி அறிக்கைகளை பதிவு செய்தனர். இதனை ஆய்வு செய்த போட்டி நடத்துனர்கள் அதில் சிறந்த வடிவமைப்புகளாக 30 ஐ இறுதி போட்டிக்கு தேர்வு செய்தனர்.இறுதி போட்டி பெங்களுரூவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவணத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் வடிவமைப்பு பற்றி சமர்பித்த ஆராய்ச்சி அறிக்கை பற்றி நேரடி செயல் விளக்கம் அளித்தனர். அவைகளை ஆய்வு செய்த போட்டி நடுவர் குழுவினர் அதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் எம்.டெக் ரொபாடிக்ஸ் இறுதி ஆண்டு மாணவி ஷில்பா தாகூர், பி.டெக் ( EEE ) பட்டதாரி சைலேஷ் சீனிவாசன் ஆகியோர் இணைந்து வடிவமைத்த மை இல்லாத பிரிண்டிங் தொழில்நுட்பம்( Inkless Printing Technology) சம்மந்தமான ஆராய்ச்சி அறிக்கையை முதலிடத்திற்கு தேர்வு செய்தனர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் பேராசிரியர் அனில் தத்ரேயா சகரஸ்புத்தே பங்கேற்று வடிவமைப்பு போட்டியில் முதலிடம் பெற்ற எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவன மாணவி ஷில்பா தாகூர் மற்றும் மாணவர் சைலேஷ் சீனிவாசன் ஆகியோருக்கு முதல் பரிசு தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் விருது வழங்கி கெளரவித்தார்.
வடிவமைப்பு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் கல்வி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *