சென்னன பெருநகர காவல் ஆணையர் திரு A.K. விஸ்வநாதன் அவர்களுக்கு தமிழக முதல்வர் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கினர்

 தமிழக தலைநகர் சென்னையில் குற்றங்களை தடுக்கும் விதமாக சென்னை பெரு நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் மூன்றாவது கண் எனும் திட்டத்தின் மூலம் நகரம் முழுவதும் CCTV எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினார்.இதில் காவல் நிலைய காமிராக்கள் மட்டுமில்லாது தொழில் நிறுவனங்கள்,கடைகள், வீடுகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் செயல்படுத்த ஊக்கப்படுத்தினார்.இதன் பலனாக சென்னையில் நடந்த திருட்டு வழக்கில் சென்னை முதல் பாண்டிசேரி வரை கிட்டதட்ட 300 கும் மேற்பட்ட கமிராகக்களை ஆய்வு செய்து திருடனை சென்னை போலீசார் கைது செய்தனர்.அதே போல சென்னையில் கடத்தப்பட்ட சிறுமியை 8 மணிநேரத்தில் கண்டுபிடிக்க CCTV பெரும் உதவியாக இருந்தது.இது போல வழிப்பறி,செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்ய பெரும் உதவியாக இருந்தது. குற்றங்களும் பெருமளவில் குறைந்துள்ளது.இதை கருத்தில் கொண்டு சுதந்திர தின விழா தினத்தன்று தமிழக முதல்வர் சிறந்த ஆளுமைக்கான விருதை பெருநகர காவல் ஆணையர் திரு A.K. விஸ்வநாதன் அவர்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *