மத்திய அரசின் 100 நாள் சாதனை மலரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் வெளியிடு. (10.09.2019)

மத்திய அரசின் 100 நாள் சாதனை மலரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் வெளியிடு. (10.09.2019)

ஜம்மு, காஷ்மீர் & லடாக் இந்தியாவின் மகுடம்

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் – ஜம்மு – காஷ்மீரை தேசிய நீரோட்டத்திற்குக் கொண் டு வந்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்ட மோடி அரசு, அரசிய ல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத் து செய்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 35ஏ-யும் ரத்து செய்யப்பட்டது.

பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இணையாக ஜம்மு – காஷ்மீரும் கொண் டு வரப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் தற்போது ஜம் மு – காஷ்மீருக்கும் பொருந்தும்.உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவித்துத் தனியார் முதலீ டுக ளை அனுமதிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மாநிலத்தின் சமூக – பொருளாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

கல்வி, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் பிற வகுப்பினருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான சட்டங்கள் ஜம்மு – காஷ்மீருக்கும் பொருந்தும்.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு, ஜம்மு – காஷ்மீரிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஜம்மு – காஷ்மீர் (மறுசீரமைப்பு) சட்டம், 2019

ஜம்மு – காஷ்மீர், சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும்.

லடாக் பகுதியின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் விதமாக, அந்தப் பகுதி இனி, சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும்.

ஜம்மு – காஷ்மீர், இடஒதுக்கீடு (திருத்த) சட்டம் 2019

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே வசிக்கும் மக்களுக்கான 3% இடஒதுக்கீடு, தற்போது ஜம்மு – காஷ்மீரின் சர்வதேச எல்லை அருகே வசிக்கும் மக்களுக்கும் நீட்டிக்கப்படும்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி, மாபெரும் பொருளாதார சீர்திருத்தங்கள்

தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம்

 • இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற மோடி அரசு உறுதிபூண்டுள்ளது.
 • முதலீடுகளை ஈர்த்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்  கவும், எனும் 2 முக்கிய விஷயங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள, 2 அமைச்சரவைக் குழுக்களைப் பிரதமர் மோடி அமைத்துள்ளார்.
 • முதலீடு மற்றும் வளர்ச்சிக் குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக் குழு எனும் 2 குழுக்களும், பிரதமரின் தலைமையிலேயே செயல்படும்.
 • வேளாண் துறையில், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளவும், உயர் அதிகாரம் பெற்ற குழு ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாற்றத்தை ஏற்படுத்த தேவையான சட்ட விதிகள் மாற்றம் குறித்து ஆராய, சில மாநில முதலமைச்சர்களும் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை

 • 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஏதுவாக, 10 பொதுத் துறை வங்கிகள் 4வங்கிகளாக இணைக்கப்பட்டு, இந்தியாவின் 2-வது பெரிய, 4-வது பெரிய, 5-வது பெரிய மற்றும் 7-வது பெரிய பொதுத் துறை வங்கிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
 • இதையடுத்து, 2017-ல், 27 ஆக இருந்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை, தற்போது 12 ஆக உள்ளது.
 • வங்கிகள் இணைப்பு நடவடிக்கை, அவற்றின் செயல்பாடுகளை சீரமைக்கவும், கடனுக்கான செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதோடு, பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் வழிவகை செய்துள்ளது.
 • வங்கிகள் இணைப்பு, அவற்றின் கடன் வழங்கும் திறன், இடர் நீக்கும் தன்மை போன்றவற்றை அதிகரிக்கவும், சந்தைகள் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டும் திறமையை மேம்படுத்தவும், வலிமையான தேசத்தின் இருப்புக்கு, சர்வதேச போட்டியை சமாளிக்கவும் உதவியாக இருக்கும்.

பொதுத்துறை வங்கிகள் மூலம் கூடுதல் கடன் விரிவாக்கம்:

 • பொதுத்துறை வங்கிகளின் மேம்பாட்டிற்காக 70,000 கோடி ரூபாயும், கூடுதல் கடன் உதவிகளை வழங்கவும், வாராக்கடனால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும், 5 லட்சம் கோடி ரூபாயும் விடுவிக்கப்படும். இதன் மூலம் பெருநிறுவனங்கள், சிறு கடனாளிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு ஆதரவு:

 • வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் கூடுதல் கடன் ஆதரவு – தேசிய வீட்டுவசதி வங்கியால் வழங்கப்படும் ரூ.20,000 கோடி, ரூ.30,000 கோடியாக அதிகரிக்கப்படும்.

ரெப்போ விகிதத்தைக் கடன்களுக்கான வட்டி விகிதத்துடன் இணைப்பதால் – வீட்டு வசதிக், வாகனம் மற்றும் பிற கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை குறையும்:

 • ரிசர்வ் வங்கி, பிற வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம், சில்லரைக் கடன்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனக் கடன்களுக்கான மாதாந்தர தவணை அளவு குறைக்கப்படும்.
 • தொழிற்சாலைகளுக்கான செயல்பாட்டு மூலதனக் கடன் எளிதாகும்.

வங்கிகள் உரிய நேரத்தில் வட்டிக் குறைப்பை செயல்படுத்துதல்:

 • ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்படும் வட்டிக் குறைப்பை வங்கிகள் நேரடியாக வழங்குவதன் மூலம், அனைத்துக் கடன்தாரர்களும் பயனடைவார்கள்.

கட்டமைப்புக் கடன்:

 • நீண்ட காலக் கடன் வழங்க ஏதுவாக, அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதற்கென தனி அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இது போன்ற திட்டங்களுக்குக் கூடுதல் கடனுதவி கிடைக்கும்.

வாகனத் தொழில்துறை ஊக்குவிப்பு:

 • வாகனத் தொழில்துறையை ஊக்குவிக்கும் விதமாக, மார்ச் 2020 வரை வாங்கப்படும். அனைத்து வாகனங்களுக்குமான, அனுமதிக்கத்தக்க மதிப்புக் குறைப்பை 30% வரை அதிகரித்து, மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.
 • அரசுத் துறைகளுக்குப் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
 • 31.03.2020 வரை வாங்கப்படும் பிஎஸ்-4  ரக வாகனங்கள், அவற்றின் பதிவுக் காலம் முடியும் வரை இயங்க அனுமதிக்கப்படும்.
 • பேட்டரி உள்ளிட்ட உதிரிப் பாகங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு வசதியை உருவாக்க மோடி அரசு கவனம் செலுத்துகிறது.
 • மின்சார வாகனப் போக்குவரத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக, மின்சார வாகனங்களுக்கான குறிப்பிட்ட சில உதிரிப் பாகங்கள் மீதான சுங்க வரிக்கு விலக்களிக்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எந்திரம் – ரயில்வே துறைக்கு ஊக்கம்

 • மோடி அரசின் 2-வது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறையை நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்திரமாக மாற்றுவதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – 2030-க்குள் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
 • இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே துறை, பயணிகள் பாதுகாப்பில் சாதனை – 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்பட்ட ரயில் விபத்துக்களில் உயிரிழப்பு ஏதுமில்லை.
 • தில்லி – மும்பை, தில்லி – ஹவுரா வழித்தடங்களில், 2022-23-க்குள் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டராக அதிகரிக்க ஒப்புதல்.
 • 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், விரைவில் சேவையைத் தொடங்க உள்ளது, 95 ரயில்கள் உத்கிரிஷ்ட் தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
 • 3 புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல்
 • அலகாபாத் – பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு ரயில் நிலையம் இடையே 3-வது பாதை, சஜன்வா – தோரிகாட் (உ.பி.) இடையே புதிய ரயில் பாதை, வைபவ் வாடி – கோலாப்பூர் (மகாராஷ்டிரா) இடையே புதிய ரயில் பாதை.
 • நியூ பொங்கைகான் – அக்தோரி (அசாம்) இடையே இரட்டை ரயில் பாதை அமைத்தல்.

தொழில் தொடங்குவதை எளிமையாக்குதல்

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு மீறல்கள்:

 • சமுதாயப் பொறுப்பாகக் கருதப்படும்
 • கம்பெனிகள் சட்டத்தின்படி பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் ஆய்வு செய்யும்.
 • பெரு நிறுவனங்கள் தங்களின் சமுதாயப் பொறுப்புணர்வுக் கடமைகளை நிறைவேற்றும் விதமாக, தற்போது செயல்பாட்டில் உள்ள பணிகளை முடிக்க, அரசு கால அவகாசம் அளித்துள்ளது.

வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு:

 • துன்புறுத்தல்களுக்குத் தீர்வு காணும் விதமாக, வருமானவரித் துறையால் வழங்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள், சம்மன்களை, பிரத்யேக ஆவண அடையாள எண்ணுடன் கணினிமய முறையில் வழங்க, மோடி அரசு முடிவு செய்துள்ளது. இது 2019 அக்டோபர் 1 அல்லது அதற்குப் பின்னர் நடைமுறைக்கு வரும்.
 • 2019 அக்டோபர் 1 முதல் அனைத்து நோட்டீஸ்களுக்கும், பதிலளிக்கப்படும் தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்.

நீண்ட கால குறுகிய கால முதலீட்டு ஆதாயங்கள் மீதான கூடுதல் வரியிலிருந்து நிவாரணம்:

 • மூலதனச் சந்தையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, நீண்ட கால/குறுகிய கால முதலீட்டு ஆதாயங்கள் மீதான அதிகரிக்கப்பட்ட கூடுதல் வரி, மோடி அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உதவி:

 • துன்புறுத்தல்களைக் குறைத்து செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க ஏதுவாக, பொதுத் துறை வங்கிகள் இனி, வாடிக்கையாளர்கள் தங்களது கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களைத் திருப்பித் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை அடமானம் வைத்த கடன்தாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
 • வாடிக்கையாளர்கள் தங்களது கடன் விண்ணப்பத்தின் நிலையை ஆன்-லைன் மூலமாக அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் – வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, துன்புறுத்தல்களைக் குறைக்கவும், ஒட்டு மொத்த செயல்பாட்டுக் கால அளவை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்:

 • குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை அனைத்தும் 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
 • மேம்படுத்தப்பட்ட, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஒற்றைத் தீர்வு கொள்கை மூலம், குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினர் பயனடைவதுடன், சில்லரைக் கடன்தாரர்கள் தங்களது கடன் நிலுவைப் பிரச்சனைகளை எளிமையான முறையில் தீர்த்துக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 • குறு, சிறு, நடுத்தரத் தொழில் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் ஒற்றை விளக்கத்தைப் பரிசீலிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு ஊக்கம்:

 • புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் முதலீட்டாளர்களுக்குப் பங்குகள்  மீதான வரி விதிப்பு (ஏஞ்சல் வரி) திரும்பப் பெறப்படுகிறது.
 • புதிதாக தொழில் தொடங்குவோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத், தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
 • ரூ.25 கோடி வரை விற்று வரவுடன் புதிதாகத் தொழில் தொடங்கும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு, 1961 ஆம் ஆண்டு வருமானவரி சட்டத்தின்படி, உத்தரவாதம் அளிக்கப்பட்ட வரிச்சலுகைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதன்படி தகுதி வாய்ந்த புதிய தொழில் நிறுவனங்களுக்கு, அவை தொடங்கப்படும் தேதியிலிருந்து ஏழாண்டுகள் வரையிலான காலத்தில், 3 ஆண்டுகளுக்கு 100% வரி தள்ளுபடி கிடைக்கும்.

வரிவிதிப்பு – வரி செலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குதல் – வருமானவரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி:

 • வருமானவரி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்தி, வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், நிரந்தர கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ள மோடி அரசு அனுமதி அளித்துள்ளது.
 • வருமானவரி கணக்குகளை முன்கூட்டியே தாக்கல் செய்தல்
 • 2019 விஜயதசமி முதல், முக அடையாளம் இல்லாத முறையில் வரி செலுத்துவோரை ஆய்வு செய்தல்.
 • கூடுதலாக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. தொகையை திரும்பப் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
 • வரி செலுத்துவோருடனான தொடர்புகளை இடர்ப்பாடு அடிப்படையிலான அணுகுமுறையில் மேற்கொள்ளுதல்.

தொழிலாளர் சட்டங்கள்:

 • அரசு ஈட்டுறுதிக் கழகப் பங்களிப்பு 6.5%-லிருந்து 4%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 • ஒப்பந்தப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச பணிக்காலத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மையை கடைப்பிடித்தல்.
 • இணையதளம் சார்ந்த மற்றும் எல்லை வரம்பு இல்லாத ஆய்வு முறை.
 • ஆய்வறிக்கைகளை 48 மணி நேரத்திற்குள் பதிவேற்றம் செய்தல்.
 • விதிமீறல்களை ஒருங்கிணைத்தல்.
 • புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் – 6 தொழிலாளர் சட்டங்களுக்கு சுய சான்றளித்தல்

சுற்றுச்சூழல் அனுமதி:

 • குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான காற்று மற்றும் தண்ணீர் தொடர்பான ஒற்றை அனுமதி.
 • குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த ஒற்றை ஒப்புதல்.

பெருநிறுவனங்கள் விவகாரம்:

 • ஒரு நிறுவனத்திற்கு இணைப்பு வழங்க இனி, ஒரே நாள் போதும் – பெயர் பதிவு மற்றும் இணைப்பு பெறுவதற்கு மத்தியப் பதிவு மையம் ஏற்படுத்துதல்.
 • ஒருங்கிணைந்த இணைப்புப் படிவம்
 • 16 குற்றப் பிரிவுகளை அபராதத் தொகை மட்டும் செலுத்தும் பிரிவுக்கு மாற்றுதல்.
 • தொழில் நிறுவனங்கள் இடையேயான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான ஒப்புதல்கள் விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.
 • பங்குகள் தொடர்பான மாறுபட்ட வாக்குரிமை விதிகளில் மாற்றம் செய்தல்.
 • கம்பெனிகள் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட 14,000-க்கும் மேற்பட்ட குற்ற நடவடிக்கைகளைத் திரும்ப பெறுதல்.

திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்டத்தை மேலும் வலிமைப்படுத்துவதற்கான திருத்தங்கள்:

 • திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்டத்திற்கான பல்வேறு திருத்தங்களுக்கு ஒப்புதல்.
 • தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் முறையிடப்படும் வாராக் கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கால அவகாசத்தை, சட்ட ரீதியான முறையீடுகளுக்கு செலவிடப்படும் காலம் உட்பட 330 நாட்களாக நிர்ணயம் செய்தல்.

வங்கிகளின் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) முறையை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளுதல்:

 • ஆதார் எண் அடிப்படையில் வங்கிகளில் பின்பற்றப்படும் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் முறையை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதன் மூலம், ஒரே செயலை திரும்பத் திரும்ப மேற்கொள்வது தவிர்க்கப்படும்.

இந்தியாவில் பங்குச் சந்தையை விரிவுபடுத்துதல்:

 • நீண்ட கால நிதிப்பயன் கிடைப்பதற்கான அணுகுமுறையை மேம்படுத்துதல்.
 • ரிசர்வ் வங்கி மற்றும் பங்குப்பரிவர்த்தனை வாரியத்தின் ஆலோசனையுடன், கடன் முறைகேடு இல்லாத இடமாற்று சந்தைகளை உருவாக்குதல்.
 • பங்குகளுக்கான உள்நாட்டுச் சந்தையை மேம்படுத்த, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நிதியமைச்சகம் பணியாற்றும்.
 • கடன் பத்திர மீட்பு இருப்பை உருவாக்குவதற்கான தேவையை ரத்து செய்ய, கம்பெனிகள் (பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திர விதிமுறைகள்) 2014 திருத்தப்பட்டுள்ளது.

இந்தியத் தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளை அணுகுதல்:

 • வைப்பு ரசீது திட்டம் 2014, பங்குப் பரிவர்த்தனை வாரியத்தால் விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியத் தொழில் நிறுவனங்கள், அமெரிக்க வைப்பு ரசீது / சர்வதேச வைப்பு ரசீது மூலமாக வெளிநாட்டு நிதி பெறுவதற்கான மேம்பட்ட அணுகுமுறை ஏற்படுத்தப்படும்.

ஆதார் அடிப்படையிலான உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் திட்டத்தை உள்நாட்டு சில்லரை முதலீட்டாளர்களும் பயன்படுத்திக் கொள்ளுதல்:

 • உள்நாட்டு சிறு முதலீட்டாளர்களுக்கான சந்தை அணுகுமுறையை மேம்படுத்த ஏதுவாக, பங்குகள் பரிவரத்தனைக்கு இணையவழி (டிமேட்) கணக்கு தொடங்குவதற்கும், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கும், ஆதார் அடிப்படையிலான உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி.

அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு சேவை முதலீட்டாளர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் வசதி:

 • வெளிநாட்டு சேவை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அந்நிய முதலீட்டாளர்களுக்கான சந்தை அணுகுமுறையை மேம்படுத்த ஏதுவாக எளிமைப்படுத்தப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் நடைமுறை ஏற்படுத்தப்படும்.

வெளிநாட்டுப் பணச்சந்தை:

 • வெளிநாட்டுப் பணச்சந்தை, உள்நாட்டுப் பங்குச்சந்தைக்கு கொண்டு வரப்படுவதுடன், இந்திய நிதி நடைமுறை விதி நன்கொடையின் கீழ், அமெரிக்க டாலர் – இந்திய ரூபாய் வர்த்தகம் அனுமதிக்கப்படும்.

அதிநவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு:

 • அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை இறுதி செய்ய, அமைச்சங்களுக்கு இடையிலான நடவடிக்கைக் குழு ஒன்று உருவாக்கப்படும்.
 • மேற்கூறப்பட்ட முயற்சி காரணமாக வளர்ச்சி அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு:

 • ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை விற்று வரவை மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களுக்குமான பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்)வரி, 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 • இதன் மூலம் 99.3% நிறுவனங்கள் பயனடையும்.

பல்வேறு துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மறு ஆய்வுக்கு ஒப்புதல்:

 • அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், இந்தியாவை அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருமளவில் ஈர்க்கும் நாடாக மாற்றுவதற்கும், கூடுதல் முதலீடுகள், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி போன்ற பலன்கள் கிடைப்பதற்கும் வழிவகுக்கும்.
 • நிலக்கரி சுரங்கத் துறையில் தாமாக 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது நிலக்கரி சந்தையில் ஆரோக்கியமான மற்றும் மேம்பட்ட போட்டிச் சூழலை உருவாக்கி, அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும்.
 • ஒப்பந்த உற்பத்தியில், தாமாக அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, இந்தியாவில் உற்பத்தி திட்டத்திற்குப் பெரும் பேரூக்கமளிப்பதாக அமையும்.
 • அச்சு ஊடகங்களைப் போலவே, டிஜிட்டல் ஊடகங்கள் வழியாகவும், செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகளைப் பதிவேற்றம் / ஒளிப்பாய்வு செய்வதற்கு தற்போதுள்ள அரசு நடைமுறைகள் வழியாக 26% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
 • தற்போது நடைமுறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, 51%-க்கு மேல் அந்நிய நேரடி முதலீடு உடைய ஒற்றை வணிகமுத்திரை கொண்ட சில்லரை வர்த்தகமாக இருந்தால், கொள்முதல் செய்யப்படும் மொத்த பொருட்களில் 30% இந்தியாவில்தான் கொள்முதல் செய்ய வேண்டும் என உள்ளது. ஆனால், தற்போது ஒற்றை வணிகமுத்திரை கொண்ட சில்லரை வர்த்தகத்திற்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கு, உள்நாட்டு ஆதாரங்களை திரட்டுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒற்றை வணிகமுத்திரை கொண்ட சில்லரை வர்த்தக செயல்பாடுகள் எளிமையாவதுடன், அதிக அளவிற்கு விட்டுக் கொடுக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். அடிப்படை ஆண்டில் அதிக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நிலையான களத்தை உருவாக்கவும் இது வகை செய்யும்.

கம்பெனிகள் திருத்தச் சட்டம் 2019:

 • திருத்தப்பட்ட சட்ட விதிகள், தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் நடைமுறையை ஊக்குவிப்பதோடு, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களைச் சாராமல் இருக்கச் செய்யும். சட்டத்தை மீறுவோர் தொடர்பான கடுமையான குற்றங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, நிறுவனங்களின் மேம்பட்ட இணக்கத்தை உறுதி செய்யும்.

சிறப்புப் பொருளாதார மண்டல (திருத்த) சட்டம் 2019:

 • சிறப்பு பொருளாதார மண்டல (திருத்த) சட்டம், அறக்கட்டளைகள் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனமும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்க வகை செய்யும். இது முதலீடுகளை ஊக்குவிக்கவும் புதிய ஏற்றுமதி மற்றும் வேலைவைாய்ப்புகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.
 • இந்த ஆண்டின் முற்பகுதியில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது முதல் 1.1 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்:

அன்றாட வர்த்தக நடைமுறையில் வியாபாரிகளும், தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை அறிந்து தீர்வு காணவும், வணிகர்களின் நலனுக்காகவும், தேசிய வணிகர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் வளர்ச்சிக் கவுன்சில் – வர்த்தக வாரியம் இணைப்பு

ஏற்றுமதி சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண பொது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம், மேம்பட்ட விமான நிலையங்களை உருவாக்கி வருவாயை அதிகரித்தல்

முதலீடு, செயல்திறன் மற்றும் பலன்களை மேம்படுத்த ஏதுவாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமான, அகமதாபாத், லக்னோ,  மங்களூரு ஆகிய 3 விமான நிலையங்களை, அரசு – தனியார் பங்களிப்பு முறையில் குத்தகைக்கு விட மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை, இந்திய விமான நிலைய ஆணையத்தின் வருவாயை அதிகரிக்க வகை செய்யும்.

மிக உயரமான, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம்:

இந்தியாவின் மிக உயரமான விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், புதுதில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், 02, செப்டம்பர் 2019 அன்று திறக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமூக நீதியை உறுதி செய்தல்

திருமணமான இஸ்லாமியப் பெண்களுக்கு நிம்மதி – பிற்போக்கான முத்தலாக் நடைமுறை ஒழிப்பு

 • பாதிப்புக்கு உள்ளாகும் திருமணமான இஸ்லாமியப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், பிற்போக்கான முத்தலாக் நடைமுறையை மோடி அரசு ஒழித்துள்ளது.
 • இஸ்லாமியப் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டம் 2019, முத்தலாக் நடைமுறையை ஒழித்துள்ளது. இஸ்லாமியக் கணவர்கள் இனி அவர்களின் மனைவியிடம் எத்தனை முறை தலாக் சொன்னாலும், அது செல்லாது என்பதோடு சட்ட விரோதமானதாகவும் கருதப்படும்.
 • முத்தலாக் நடைமுறை, தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு, 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமையைப் பாதுகாத்தல்: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்தது மோடி அரசு

 • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டால், மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
 • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலின ரீதியாக சரிசமமாகக் கருதப்படும்.
 • ஓராண்டுக்குள் 1023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு போக்சோ வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும்.
 • நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 40,000 ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு, குழந்தைகளிடம் யார் நல்ல நோக்கத்தில் அணுகுகிறார்கள், யார் கெட்ட நோக்கத்தில் அணுகுகிறார்கள் என்பது பற்றி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

திருநங்கைகள் (உரிமைப் பாதுகாப்பு) சட்டம் 2019: திருநங்கைகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது

 • பாகுபாடு காட்டுவதைத் தடுப்பதோடு, திருநங்கைகளின் உரிமைகளை விளக்கியுள்ளது.
 • எந்தவொரு அரசு அல்லது தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்குவதில் திருநங்கைகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது.
 • திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளிப்பதற்கான நடைமுறைகள், இந்த சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

பழங்குடியினர் நலன்

 • 150 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு, தரமான உயர் தொடக்க, இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
 • 55 பள்ளிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.
 • வன நிதித் திட்டம் – பாரம்பரிய வன உற்பத்திப் பொருட்கள் / பிற பொருட்கள், வன நிதி நல மையங்கள மூலமாக மதிப்பு கூட்டப்படுவதுடன்; பழங்குடியினருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் உருவாக்கப் பயிற்சி வழங்கப்படும்.
 • நாகாலாந்து, ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 123 வன நிதி நல மையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலன்

 • இதுவரை இல்லாத அளவாக, இந்த ஆண்டு 48 சதவீதம் பெண்கள் உட்பட, 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள், மானிய உதவியின்றி ஹஜ் யாத்திரை செல்ல உள்ளனர்.
 • அடுத்த 5 ஆண்டுகளில், 50 சதவீத பெண் குழந்தைகள் உட்பட 5 கோடி மாணவர்களுக்குப் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படும்.
 • நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரிய சொத்துக்களில், பதிவு செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் சொத்துக்களை 100 சதவீதம் டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஊதியப் பாதுகாப்பை உறுதி செய்தல்

ஊதிய விதிகள் 2019: மகளிர் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது

 • வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் – பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றியிருப்பதுடன், ஆண்களுக்கு இணையான ஊதியம் பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • அமைப்பு ரீதியான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 50 கோடி பேருக்கு, குறைந்தபட்ச ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதற்கு நிலையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • குறைந்தபட்ச ஊதிய வரம்பிற்குள் வராத, விவசாயத் தொழிலாளர்கள், பெயிண்டர்கள், உணவகங்கள் மற்றும் தாபாக்களில் பணிபுரிவோர்,  பாதுகாவலர்கள் போன்ற பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களும் இனி, குறைந்தபட்ச ஊதியம் பெறுவதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சிறு வியாபாரிகள் ஓய்வூதியத் திட்டம் 2019:

 • சிறு வணிகர்கள் 60 வயதை அடையும் போது, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3000 கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் பிரதமரின் சிறு வியாபாரிகள் ஓய்வூதியத் திட்டம் 2019-க்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடி சிறு வணிகர்கள் பலனடைவார்கள்.
 • அனைத்து சிறுகடை வியாபாரிகள், சில்லரை வணிகர்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு பெற்றுள்ள நபர்கள் பலனடைவார்கள்.

நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்தல்

 • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, அறிவிக்கை 9 ஆகஸ்ட் 2019 அன்று வெளியிடப்பட்டது.
 • ஒப்பந்த வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், பொருட்களை இருப்பு வைப்பதற்கான அளவுக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
 • நிலையான விலையை உறுதி செய்ய, 16 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்குப் பருப்பு வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்திற்கான பங்களிப்பு குறைப்பு

 • தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள்,  வேலை வழங்குவோர் என இரு தரப்பினரும் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை 6.5%-லிருந்து 4% ஆக அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் 3.6 கோடி தொழிலாளர்களும், 12.85 லட்சம் வேலை வழங்குவோரும் பலனடைவார்கள்.

நிதி முறைகேடுகளிலிருந்து ஏழைகளைப் பாதுகாத்தல்– முறைப்படுத்தப்படாத முதலீட்டுத் திட்டங்கள் தடைச் சட்டம் 2019

 • நாட்டில் சட்ட விரோதமாக முதலீடுகளைப் பெறும் நடைமுறைகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் உதவியாக இருக்கும்.
 • சாதாரண முறையிலான வர்த்தகத்தின் மூலம் திரட்டப்படும் முதலீடுகள் தவிர, முறைப்படுத்தப்படாத முதலீட்டுத் திட்டங்களுக்குத்  தடை விதிப்பது மற்றும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான விரிவான நடைமுறைகள் இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் அதிகாரமளித்தல்

வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் இதுவரை சென்றடையாதவர்களுக்கு சென்றடையச் செய்தல்

 • பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் மூலம், 2019-20 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 1.95 கோடி வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.
 • நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2022 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும், மின்சார இணைப்பு மற்றும் தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதை அரசு உறுதி செய்யும்.
 • ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம், 2024-க்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும்.
 • ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள தலா ஒரு மகளிருக்கு, முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஒவ்வொரு மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினருக்கும், ஜன் தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு, அந்தக் கணக்கில் இருப்பில் உள்ள தொகையை விட கூடுதலாக ரூ.5 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
 • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் – பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் மூலம் 16,085 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, இதுவரை 41 லட்சம் பேர் சிகிச்சை பெற்றிருப்பதுடன், 10 கோடி
  ஈ-அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
 • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 20,700-க்கு மேற்பட்ட சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை

 • இந்த நோக்கத்தை அடைய ஏதுவாக, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா குஜராத் ஆகிய 4 மாநிலங்களில், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தாலும், ஒரே குடும்ப அட்டையைப் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் உஜ்வாலா திட்டம் (PMUY)

குறிப்பிடத்தக்க சாதனையாக, பிரதமரின் உஜ்வாலா (சமையல் எரிவாயு) திட்டத்தின் மூலம், 100 நாட்களில் 8 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 100 நாட்களில் 80 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

29.08.2019 நிலவரப்படி, 17,39,054 – 5 கிலோ உருளைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதோடு, 5 கிலோ உருளைகளைப் பெற விரும்பும் நுகர்வோர் எண்ணிக்கையும், 4,89,322 ஆக அதிகரித்துள்ளது.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM)

16,494 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

11,750 தனி நபர்கள் / இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதாரத்திற்கான பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன; இவர்களில் 8,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

8,183 தனி நபர்கள் / குழுக்கள் குறுந்தொழில் நிறுவனங்களை அமைக்க உதவி செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் வீடற்ற மக்களுக்காக, 49 தங்குமிடங்கள் கட்டப்பட்டு செயல்படத் தொடங்கி உள்ளன.

மாநிலங்களுக்கு மத்திய நிதியுதவியாக 100 நாட்களில் ரூ.164.27 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டித்தல்

 • பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்டத்தை மேலும் 3.44 கோடி விவசாயிகளுக்கு மோடி அரசு நீட்டித்ததன் மூலம், மொத்தப் பயனாளிகள் எண்ணிக்கை 6.37 கோடியாக அதிகரித்துள்ளது.
 • விவசாயிகளுக்கான நேரடி உதவித் திட்டத்தின் கீழ், 100 நாட்களில் ரூ.8,955 கோடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், இத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.20,520 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அன்னமிடுவோரின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான ஓய்வூதியத் திட்டம்

 • பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதல் 3 ஆண்டுகளிலேயே 5 கோடி சிறு மற்றும் ஏழை விவசாயிகள் ஓய்வூதியம் பெறுவார்கள்.
 • 60 வயதை அடைவோருக்கு மாதம் 3,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

40 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை இருப்பு வைத்தல்

 • ஆகஸ்ட் 1, 2019 முதல் ஜூலை 31, 2020 வரையிலான ஓராண்டு காலத்தில், 1674 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில், 40 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை இருப்பு வைக்க நடவடிக்கை.
 • விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகங்களே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை.
 • கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை உரிய காலத்திற்குள் வழங்கப்படவும், சர்க்கரை விலையை நிலையாக வைத்திருக்கவும் இத்திட்டம் உதவும்.
 • கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும், கரும்பு நிலுவைத் தொகைகளை வழங்க இத்திட்டம் உதவியாக இருக்கும்.

உபரி இருப்பை வெளியேற்றுவதற்கான சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கை

 • நடப்பு நிதியாண்டில் சுமார் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படும்.
 • 2019-20 கரும்புப் பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு ஒரே தவணை ஏற்றுமதி மானியமாக ஒரு மெட்ரிக் டன்னிற்கு ரூ.10,448 வழங்கப்படும். இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.6,268 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 • கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருந்தால், இந்த  மானியத் தொகை சர்க்கரை ஆலைகள் சார்பில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும், எஞ்சிய தொகையிருந்தால் அது ஆலைகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

உயிரி எரிபொருள்:

 • எத்தனால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. போதுமான அளவு எத்தனால் கிடைக்கச் செய்ய கூடுதல் விலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.
 • பெட்ரோலில் அதிக அளவு எத்தனாலைக் கலப்பதன் மூலம், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை குறைக்கப்படுவதோடு, வேளாண் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் அதிக அளவில் கிடைக்கவும், காற்று மாசுபடுதலைக் குறைத்து விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கவும் வகை செய்யப்படும்.

கரீஃப் பயிர்களுக்குக் கூடுதலான குறைந்தபட்ச ஆதரவு விலை

 • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை விட 1.5 மடங்கு லாபம் கிடைக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.
 • உற்பத்திச் செலவை விட விவசாயிகளுக்கு மிக அதிக வருவாய் கிடைக்கும் தானியங்களாக, கம்பும் (85%), அதற்கு அடுத்தபடியாக உளுந்து (64%), துவரை (60%) பயிர்களும் உள்ளன.

பாதம் மற்றும் வாய் நோய்கள் மற்றும் புரூசெல்லோசிஸ் நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இயக்கம்

 • நாடு  தழுவிய இந்த இயக்கத்தை 11 செப்டம்பர் 2019 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
 • இத் திட்டத்திற்கான 100% செலவையும் மத்திய அரசே வழங்கும்.
 • 2019 முதல் 2024 வரை இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.12,652 கோடியாகும்.

பாசனத்திற்கான தண்ணீர்ப் பாதுகாப்பை நோக்கி

ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கம்

 • தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவாக விரிவான தீர்வு காணப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மோடி அரசு ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது.
 • பிரதமர் மோடியின் விடாமுயற்சியின் பலனாக, நீர் மேலாண்மை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது மக்களின் பேச்சாக உள்ளது.
 • 1, ஜூலை 2019 அன்று ஜல் சக்தி திட்டம் – தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்கான திட்டம் தொடங்கப்பட்டது.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட 1,146 கிராமப்புற வட்டாரங்களில், அக்டோபர் 15-ந் தேதிக்குள் 2.11 லட்சம் ஜல் சக்தி திட்டப் பணிகளை நிறைவேற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 1.57 லட்சம் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் ஆதரவுடன், தண்ணீர் சேமிப்பு, பாரம்பரிய நீர்நிலைகளைத் தூர்வாருதல், மறுபயன்பாடு மற்றும் மறுசேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல், நீர்நிலை மேலாண்மை மற்றும் தீவிர வனமயமாக்கல் ஆகிய 5 முன்னுரிமைப் பணிகள் ஜல் சக்தி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
 • 7.23 லட்சம் இயற்கை ஆதார மேலாண்மை (NRM) / தண்ணீர் சேமிப்பு பணிகள் (MGNREGS) 30 ஆகஸ்ட் 2019 வரை முடிக்கப்பட்டுள்ளன.

நல்ல ஆளுகை

வெளிப்படைத்தன்மைக்கு ஊக்கம் – ஊழல் ஒழிப்பு

 • மூத்த அதிகாரிகள் உட்பட 49 வருமானவரி அதிகாரிகளுக்கு, அடிப்படை விதி 56 (ஜே) –ன் கீழ், பொது நலன் கருதி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் 2019 – பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

 • நாடாளுமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்: அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து, ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு, முத்தலாக் தடை மற்றும் மோட்டார் வாகன சட்டங்கள் நிறைவேற்றம்.
 • 17-வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்றத்தில் மொத்தம் 40 மசோதாக்கள் (மக்களவையில் 33, மாநிலங்களவையில் 7) அறிமுகம் செய்யப்பட்டன. மக்களவையில் 35 மசோதாக்களும்; மாநிலங்களவையில் 32 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
 • மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, இரு அவைகளிலும் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை / முழுமையாக செயல்பட்ட கூட்டத் தொடராகும்.
 • மக்களவை 137% அளவிற்கும், மாநிலங்களவை 103% அளவிற்கும் தோராயமாக செயல்பட்டுள்ளன.

தேவையற்ற 58 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன

 • மோடி அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 1,000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது 2019-ல் 58 தேவையற்ற சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 • இவற்றில் சில சட்டங்கள், மக்களின் வாழ்க்கையையும், தொழில் தொடங்குவதையும் எளிதாக்கக் கூடியவையாக இருந்த போதிலும், அந்த சட்டங்கள் காலாவதியான பிறகும் இப்போது வரை மக்களைத் துன்புறுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்தன.

தொலைத் – திட்டத்தின் கீழ், ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு சட்ட உதவி

 • 115 முன்னேற விரும்பும் மாவட்டங்களில், ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள 28,060 பொது சேவை மையங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மூலம் காணொலிக் காட்சி மற்றும் தொலைபேசி வாயிலாக சட்ட உதவி.
 • பெண்கள், குழந்தைகள், ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், நிலநடுக்கம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, தகுதியான நபர்களுக்கு தொலைத் திட்டத்தின் கீழ் இலவச சட்ட ஆலோசனை.
 • மற்றவர்கள், ஒரு ஆலோசனைக்கு ரூ.30/- வீதம் கட்டணம் செலுத்தி தொலை – சட்ட சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீதித்துறையை பலப்படுத்துதல்

 • உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தவிர, உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையை 30-லிருந்து 33 ஆக மோடி அரசு அதிகரித்துள்ளது.
 • தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலிகள் வசிக்க மிகவும் பாதுகாப்பான மற்றும் பெரிய அளவிலான வசிப்பிடமாக இந்தியா உருவெடுத்துள்ளது

 • வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக, இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 2,967 ஆக அதிகரித்துள்ளது.
 • இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவாக 33% அதிகரிப்பு.
 • நாட்டில் உள்ள “பாதுகாக்கப்பட்ட பகுதிகள்” பரப்பு அதிகரித்துள்ளது. 2014-ல் 692 ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2019-ல் 860-க்கு மேல் உள்ளன.

சர்வதேச புதுமைப் பட்டியல் 2009-ல், 52-வது இடத்திற்கு முன்னேறி சாதனை

 • புதுமைகளைப் புகுத்தும் நாடுகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான சர்வதேச பட்டியலில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி, 52-வது இடத்தில் உள்ளது.
 • 2015-ல் 81-வது இடத்தில் இருந்த நிலையில், 29 இடங்கள் முன்னேறி 2019-ல் 52-வது இடத்திற்கு வந்ததன் மூலம், எந்தவொரு பெரிய பொருளாதார நாடும் காணாத சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை:

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச் சட்டம் 2019

 • எந்தவொரு தனி நபரையும் தீவிரவாதியாக அறிவித்து, அவரது சொத்துக்களை முடக்க இச்சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கிறது.
 • தேசியப் புலனாய்வு முகமையால் விசாரிக்கப்படும் தீவிரவாத வழக்குகளில், சொத்துக்களைக் கைப்பற்ற / முடக்கி வைக்க அதன் தலைமை இயக்குனருக்கு (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரமளிக்கப்படுகிறது.

தேசியப் புலனாய்வு முகமை சட்டம், திருத்தச் சட்டம் 2019

 • இந்தியாவுக்கு வெளியே நிகழ்ந்த தீவிரவாத செயல்களில், இந்தியாவின் சொத்துக்களுக்கோ /  குடிமக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால், அது பற்றி விசாரணை நடத்த, தேசியப் புலனாய்வு முகமைக்கு, எல்லை தாண்டிய  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 • வெடிப் பொருட்கள், ஆட்கடத்தல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைத் தயாரித்தல் / விற்பனை மற்றும் கணினி தீவிரவாதம் போன்ற புதிய குற்றங்களும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

இணையவழிக் குற்றத்தைக் கட்டுப்படுத்துதல்:

 • அனைத்துவிதமான இணையவழிக் குற்றங்கள் குறித்து காவல் நிலையங்களுக்குச் செல்லாமல் புகார் அளிப்பதற்கு ஏதுவாக, மக்களை மையப்படுத்தும், தேசிய இணையவழிக் குற்றப் புகார் இணையதளம் (cybercrime.gov.in) தொடங்கப்பட்டது.
 • இந்த இணையதளத்தில் பதிவாகும் புகார்களுக்கு, அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சட்ட அமலாக்க முகமைகளை ஆன்லைன் மூலம் அணுகி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

பேரிடர் மேலாண்மை

 • பேரிடர் நிவாரண உள்கட்டமைப்புக்கான சர்வதேச ஒருங்கிணைப்பை (சி டி ஆர் ஐ) ஏற்படுத்துதல் – 2019 செப்டம்பர் 23-ம்தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐநா-வின் பருவநிலை செயலூக்க உச்சிமாநாட்டின்போது, பிரதமர், இந்த சிடிஆர்ஐ அமைப்பை தொடங்கி வைப்பார்.

சாலைப்பாதுகாப்பு

மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019-ன் மூலம் மோடி அரசு சாலைப்பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

 • நாட்டில் பாதுகாப்பான, ஊழலற்ற, திறமையான போக்குவரத்து நடைமுறையை ஏற்படுத்த வழி வகுக்கும் மோட்டார் வாகன (திருத்த) 
  • சட்டம் 2019 நடைமுறைக்கு வந்துள்ளது.
  • இந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதியிலிருந்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் மின்னணு சுங்க வசூலிப்பைக் கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மின் வாகனங்களுக்கு ஊக்கம்

  • மின்சார வாகனங்கள், வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியான விலையில் கிடைக்கும வகையில், அதன் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு தடையின்றி கிடைக்கும் வகையில், மின்வாகன மின்னூட்டக் கருவிகளுக்கான (Charger) ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
  • மின்சார வாகனங்களைப் பொது போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, உள்ளாட்சி அமைப்புகள், வாடகைக்கு அமர்த்தும் மின்சாரப் பேருந்துகளுக்கு, ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மின்சார வாகனங்களை வாங்குவதற்குப் பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்திய வட்டி மீது, ரூ.1.5 லட்சம் அளவுக்குக் கூடுதல் வருமானவரி கழிவு. இதன் மூலம், மின்சார வாகனங்களுக்கான கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரை, ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக, வரி செலுத்துவோருக்குப் பயன் கிடைக்கும்.
  • பிரதமரின் கிசான் உர்ஜா சுரக்ஷ் எவம் உத்தான் மகாபியான் திட்டம்
  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், அவர்களது தரிசு நிலங்களில் சூரிய மின்சக்தி சாதனங்களை அமைத்து, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை விலைக்கு விற்பது தொடர்பான பிரதமரின் பெருந்திட்டம்.
  • இந்தத் திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டது –
  • பரவலாக்க முறையில் பத்தாயிரம் மெகாவாட் திட்டம் அமைத்தல் / சூரியசக்தி அல்லது இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான மின்சார உற்பத்தி நிலையங்களைக் கொண்ட மின்தொகுப்புடன் இணைத்தல்.
  • 50 லட்சம் சூரியசக்தி விவசாய பம்புகளை அமைத்தல்
  • தொகுப்பில் இணைக்கப்பட்ட 10 லட்சம் விவசாய பம்புகளை சூரியசக்திமயமாக்குதல்
  • 2019 ஜூன் 30 அன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின்சார அமைப்புகளின் உற்பத்தித் திறன் 80,000 மெகாவாட்டைத் தாண்டியது.

  எரிசக்தி பாதுகாப்பு

  • கடந்த 100 நாட்களில், 80 லட்சத்துக்கும் அதிகமான எல்இடி பல்புகள் விநியோகிக்ககப்பட்டுள்ளன, சுமார் 91,000 எல்இடி குழல் விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன, 33,500 மின்சாரத்தை சேமிக்கும் திறன்கொண்ட மின்விசிறிகள் விநியோகிக்கப்பட்டன.
  • இந்த நடவடிக்கைகள் மூலம், ஓராண்டில் 123 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  திபாங் நீர் மின்திட்டம்

  • அருணாசலப்பிரதேசத்தில் திபாங்க் நீர் மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • ரூ.28,080 கோடி மதிப்பிலான இந்தியாவின் மிகப் பெரிய நீர் மின்திட்டமாக இது அமையும்.
  • 2,880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதுடன் வெள்ளத்தைத் தடுக்க உதவும்.

  பொலிவுறு நகரத்திட்டம்

  • ரூ.609 கோடி மதிப்பிலான 88 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ரூ.2,778 கோடி மதிப்பிலான 153 புதிய திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டன; ரூ.4,086 கோடி மதிப்பிலான 127 திட்டங்களுக்குப் பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஒரு நகரம், ஒரு தாக்கம் என்னும் 100 நாள் திட்டம் தொடங்கப்பட்டது. 100 பொலிவுறு நகரங்கள் ஒவ்வொன்றிலும், 2019 அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடையும் 100 நாட்களில், ஒரு முக்கிய பணியை முடித்திருக்க வேண்டும். இந்த முன்முயற்சி மூலம் 2.7கோடி மக்கள் பயனடைவார்கள்.

  பிரதமரின் வீட்டு வசதித்திட்டம்

  • 2021-22-ஆம் ஆண்டுவாக்கில் மத்திய அரசின் நிதியுதவியுடன், நகர்ப் பகுதிகளில் ரூ.23,400 கோடி முதலீட்டில், 4.26 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
  • கிராமப்புற பகுதிகளில் தகுதி உடைய பயனாளிகளுக்கு 1.95 கோடி வீடுகள் கட்டப்படும்.

  கட்டுப்படியான விலையில் வீட்டு வசதி.

  • சுய அனுபவத்தில் உள்ள வீடுகளுக்கான கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு, ரூ.2.00 லட்சம் வரை கழிவுச் சலுகை பெற அனுமதிக்கப்படுகிறது.
  • 2020 மார்ச் 31-ம் தேதி முடிய ரூ.45 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் கழிவு.
  • எனவே, கட்டுப்படியான விலையில், ஒருவர் வாங்கும் வீட்டுக்கு இனி ரூ.3.5 லட்சம் வரை வட்டிக்கழிவு கிடைக்கும். இது 15 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் வீடு வாங்கிய நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு, ரூ.7.00 லட்சம் அளவுக்கு பயன் கிடைக்க வழிவகுக்கும்.
  • கட்டுப்படியான விலை கொண்ட வீடுகளை உருவாக்குபவர்களுக்கு லாபத்தில் வரிச்சலுகை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.

  உள்நாட்டு நீர்வழிகள்

  • எப்போதும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக இருநாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு இந்தியா வழியாக, இந்திய நீர்வழி ஒன்று 12.07.2019 அன்று பயன்படுத்தப்பட்டது.
  • இந்தியா தனது மாலுமிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்க அடையாள அடிப்படையிலான அடையாள ஆவணத்தை வழங்கி, இந்த விஷயத்தில் உலகிலேயே முதல் நாடாக மாறியுள்ளது.
  • தேசிய நீர்வழி -2 (பிரம்மபுத்ரா) வழியாக பூடானிலிருந்து பங்களாதேஷுக்கு, இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் கப்பல் 1000 டன் சரக்கை எடுத்துச் சென்றது. இந்தோ – பங்களா  நீர்வழிப்பாதையை கப்பல் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா டிஜிட்டல் முறையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • 2019 ஜூன் 8-ம் தேதி இந்தியப் பிரதமர் மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது, கடல் வழியாகப் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் சேவையை ஏற்படுத்துவதற்கு இந்தியாவும், மாலத்தீவுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

  சுற்றுலா

  • வரலாற்றுச் சிறப்பு மிக்க குதுப்மினார், சப்தர்ஜங் மசூதிகளில், ஒளியூட்டம் தொடங்கப்பட்டது.
  • நாடு முழுவதும் வரலாற்றுச் சிறப்பு மிக்க 10 நினைவுச் சின்னங்கள், பொதுமக்களின் பார்வைக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
  • வியப்புமிகு இந்தியா பிரச்சாரம், பசிபிக் ஆசியா பயணச் சங்கத்தின் 2019- ஆம் ஆண்டுக்கான தங்க விருதைப் பெற்றது.
  • சாகசச் சுற்றுலா – 4 மாநிலங்களில் உள்ள 137 மலைச்சிகரங்கள் வெளிநாட்டவர்கள்  மலையேறுவதற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
  • புதிதாக உருவாக்கப்பட்ட லே யூனியன் பிரதேசத்தில் ஆடி மகோத்சவ் ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 120 பழங்குடியினக் கைவினைஞர்கள், தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தினர்.

  சர்வதேச யோகாதின ஊடக விருது (AYDMS) உருவாக்கம்

  • யோகா-33 செய்தியைப் பரப்புவதில் ஊடகப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், 3  பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படும்
  • 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில், சிறந்த யோகா செய்தி வெளியிடும் செய்தித்தாள்களுக்கு 11 விருதுகள் வழங்கப்படும்.
  • 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில், சிறந்த யோகா செய்தி வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு 11 விருதுகள் வழங்கப்படும்.
  • 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில், சிறந்த யோகா செய்தி வெளியிடும் வானொலிக்கு 11 விருதுகள் வழங்கப்படும்.

  இந்தியாவைப் பாதுகாப்பவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசின் முதல் முடிவு.

  • இந்தியாவைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்காக, மோடி 2.0 அரசு எடுத்த முதல் முடிவு, எது தங்களின் முன்னுரிமை என்பதைக் காட்டியது.
  • தேசியப் பாதுகாப்பு நிதியத்தின் கீழ் வழங்கப்படும் பிரதமர் உதவித்தொகைத் திட்டத்தில், முக்கிய மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. உதவித்தொகை விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டது.
  • மேலும், தீவிரவாதத் தாக்குதல்கள் அல்லது நக்சலைட்டு தாக்குதல்களில் உயிர்த்தியாகம் புரிந்த, மாநிலக் காவல்துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு உதவித்தொகைத் திட்டத்தின் வரம்பு விரிவாக்கப்பட்டுள்ளது.

  சுகாதாரப் பராமரிப்பு உள்கட்டமைப்பில் கவனம்

  மருத்துவக் கல்வி சீரமைப்பை நோக்கமாகக் கொண்டு மோடி அரசு தேசிய மருத்துவக் கவுன்சில் சட்டம் 2019-ஐக் கொண்டுவந்துள்ளது.

  • மாணவர்கள் மீதான சுமையைக் குறைத்தல், மருத்துவக் கல்வியின் கட்டணங்களைக் குறைத்தல், நடைமுறைகளை எளிமையாக்குதல், இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மக்களுக்குத் தரமான சுகாதாரப் பராமரிப்பு எளிதில் கிடைக்க வகை செய்தல் ஆகியவற்றை தேசிய மருத்துவ கவுன்சில் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நாட்டின் மருத்துவக் கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, தரம் ஆகியவற்றை இந்த நடவடிக்கை உறுதி செய்யும்.
  • இதைச் சார்ந்த குறிப்பு, 2019-20ஆம் கல்வி ஆண்டில், அரசு மருத்தவக் கல்லூரிகளில் ஓராண்டில் அதிகப்படியாக கூடுதல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரித்ததைக் காண முடிந்தது. 25 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,750 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன.

  75 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

  • ஒப்புதல் வழங்கப்பட்ட 75 கூடுதல் அரசு மருத்துவக் கல்லூரிகள் 2021-22ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்படும். அவை மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் 3-வது பகுதியின் கீழ், தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம், நாட்டில் குறைந்தபட்சம் 15,700 எம் பி பி எஸ் இடங்கள் அதிகரிக்கப்படுவதுடன்
   • அரசு மருத்துவமனைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில் ஏற்கெனவே இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நாட்டில் குறைந்த மருத்துவக் கல்வியை, கட்டணத்தில் கிடைக்கச் செய்யவும்  இது வழிவகுக்கும்.
   • மருத்துவக் கல்லூரி இல்லாத, முன்னேறாத பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
   • முன்னேறாத மாவட்டங்களுக்கும், 300 படுக்கை வசதி கொண்ட மாவட்ட மருத்துவமனைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

   மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்கள் பிரிவில் இடஒதுக்கீடு) சட்டம், 2019.

   • மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்த இடஒதுக்கீட்டிற்கு வகை செய்கிறது.
   • எஸ்சி / எஸ் டி / எஸ்இபிசி / இடபிள்யூஎஸ் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து, தகுதி நிறைந்த, திறமையானவர்களை ஈர்த்து, உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் தரத்தை உயர்த்த இந்த முடிவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   அணுகக்கூடிய விதத்தில் உயர்கல்வியை ஏற்படுத்துதல்: ஆந்திரப்பிரதேசத்தில் 2 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள்

   • ஆந்திரப்பிரதேச மத்திய பல்கலைக்கழகம், ஆந்திரப்பிரதேச மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் – என ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா 2019-க்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது.
   • ஜீவன் கவ்சல் – மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான வாழ்க்கைத் திறன் திட்டம் தொடங்கப்பட்டது.
   • அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கையை 42 லட்சமாக உயர்த்த, மோடி அரசு, நிஷ்த்தா என்னும் உலகின் மிகப் பெரிய ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

   உடல் தகுதி இந்தியா இயக்கம்

   • தேசிய விளையாட்டு தினமான 2019 ஆகஸ்ட் 20-ம் தேதி உடல்தகுதிகள் இந்தியா இயக்கத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
   • இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில், உடல் தகுதியை அங்கமாக்குவதுடன், அவர்களை உடல் தகுதி நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்த இயக்கம்.
   • உடல் தகுதி, மனவளம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், ஆரோக்கியம் மற்றும் சரிவிகித உணவுமுறை, முன்னெச்சரிக்கை ஆரோக்கியப் பராமரிப்புப், வாழ்க்கைக்கு உகந்த சூழலை உருவாக்குவதல் உட்பட மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் இந்த இயக்கம் உள்ளடக்கியுள்ளது.

   விளையாட்டுக்களுக்கு ஊக்கம்

   • இளைஞர்களிடையே, சாகசச் செயல்களை ஊக்குவிக்க புதுதில்லியில் உள்ள இந்திய மலையேறும் அறக்கட்டளை, எவரெஸ்ட் மலையேற்றம் 2019 என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
   • இந்தியாவை உயர்கல்வி மையமாக்க, வெளிநாட்டு மாணவர்கள், இங்கு கல்வி கற்கும் வகையிலான, இந்தியாவில் பயிலுங்கள் என்னும் திட்டம் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
   • அனைத்து அமைச்சகங்களிலும் உள்ள நிதியை ஒருங்கிணைத்து, நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுச் சூழல் ஆராய்ச்சியை வலுப்படுத்த தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளது.

   ஜம்மு காஷ்மீரில் தூர்தர்ஷன் இலவச டிஷ் செட்டாப் பாக்ஸ் விநியோகம் தொடங்கப்பட்டது.

   • காஷ்மீர் தூர்தர்ஷனிலிருந்து அரைமணி நேர டோக்ரி நிகழ்ச்சி மற்றும் செய்திகள் அலைவரிசையின், தொடக்க இசையோடு தொடங்கப்பட்டது.

   சந்திரயான்-2 விண்கலம்

   • சந்திரயான்-2 விண்கலம் தனது பணியில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
   • நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
   • அதே வேளையில், சந்திரயான்-2 ஆர்பிட்டர், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நன்றாக இயங்கி வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது.
   • இந்தப் பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்றும், நிலவில் இறங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
   • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றிய பிரதமர், அறிவியலில் தோல்வியே இல்லை என்று கூறினார்.
   • விஞ்ஞானிகளின் அளப்பரிய முயற்சிகளுக்கும், இஸ்ரோவின் சாதனைகளுக்கும் நாடே தலைவணங்குகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
   • எனினும், விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இருப்பதை ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
   • லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

   பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறைகள்

   பாதுகாப்புப் படைகளிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்

   • மிகப்பெரிய ராணுவ சீர்திருத்தமாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது சுதந்திர தின உரையில், முப்படைத் தளபதி பதவி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆயுதப் படைகளை மேலும் திறன் கொண்டதாக உருவாக்கவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்த அறிவிப்பு வழிவகுக்கும்.

   அப்பாச்சி ஹெலிகாப்டர்களை சேர்த்தல்

   • 2019 செப்டம்பர் 3-ம் தேதி பதான்கோட் விமானப்படை நிலையத்தில் உள்ள படைப்பிரிவில், இந்திய விமானப்படை எட்டு ஏ எச்-64 இ, ரக அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை சேர்த்தது. விமானப்படையில் எம்ஐஜி 35 ரக ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்படும்.

   பாதுகாப்பு – தொழில்நுட்பவியல் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் நலன்

   • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) 2019 ஆகஸ்ட் 4-ம் தேதி சண்டிப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை தரையிலிருந்து வான் இலக்குகளை விரைந்து தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
   • அமைதியான இடங்களில் பணியாற்றும் 3 ஆயுதப்படைகளையும் சேர்ந்த அலுவலர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் சலுகை மீண்டும் கொண்டுவரப்படுவதாக 2019 ஜூன் 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அமைதியான இடங்கள் உட்பட எல்லா இடங்ளிலும் பணியாற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் இனி ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

   துணிச்சலான மத்திய ஆயுதக் காவல்படையினருக்கு அதிக பயன்கள்:

   • மத்திய ஆயுதக் காவல் படையின் அதிகாரிகளுக்கு அமைப்பு ரீதியிலான அந்தஸ்தை மோடி அரசு வழங்கியுள்ளது. பணியில் ஈடுபடாத காலத்திற்கும் நிதி உயர்த்துதல் உட்பட பல்வேறு பயன்களைப் பெறும் தகுதியை இது வழங்கும்.
   • மத்திய ஆயுதக்காவல் படை, எல்லைப்பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, சஹஸ்த்ர சீமா பால் ஆகிய ஐந்து துணை ராணுவப்படைகள் அல்லது மத்திய ஆயுதக்காவல் படையிலிருந்து 2006-ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இந்த நடவடிக்கை பலன் அளிக்கும்.

   ரயில்வே பாதுகாப்புப் படைக்கு அமைப்பு ரீதியிலான குரூப்-ஏ அந்தஸ்து

   • ரயில்வே பாதுகாப்புப் படைக்கு அமைப்பு ரீதியிலான குரூப்-ஏ அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
   • ரயில்வே பாதுகாப்புப் படைக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது அதன் தகுதியுடைய அதிகாரிகளின் பணிக்கால முன்னேற்றத்திற்குப் பயன்படும்.

   மோடி அரசின் பணிகள் சர்வதேசப் பரிசுகளை வென்றுள்ளது

   இந்தியா மேலும் மேலும் தூய்மையான நாடாக மாறும் என உலக நாடுகள் கூறுகின்றன!

   • மோடி அரசின் தூய்மை இந்தியா முன்முயற்சிகளால், நிலத்தடி நீர் மாசுபடுவது குறைந்திருப்பதோடு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதிகளாக மாறியுள்ளன என்று யுனிசெப் (UNICEF) ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
   • தூய்மை இந்தியா திட்டத்தின் விளைவுகள் பற்றி இந்த ஆய்வு கூறுவன: 2000 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழித்தல், ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவுக்கு வீதம் அதிகரித்த நிலையில், 2015-19 காலகட்டத்தில் இந்த அளவு, ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது.

   பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம். பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் – மாபெரும் விளைவை ஏற்படுத்திய மக்கள் இயக்கம்

   • 2015-16-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண் குழந்தைகள் பிறப்பு என்ற அளவில் இருந்த அகில இந்திய பாலின விகிதம் 2019 மார்ச் மாதத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
   • அரியானா மாநிலத்தில், 2015-16-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 887 பெண் குழந்தைகள் என்ற அளவில் இருந்த பிறப்பு விகிதம், 2018-19-ல் 914 ஆக அதிகரித்துள்ளது.

   மோடி அரசின் கிராமப்புற சாலைத் திட்டம் சர்வதேசப் பரிசை வென்றுள்ளது

   • அடிப்படை கட்டமைப்புத் திட்டங்கள் மீது மோடி அரசு அதிக கவனம் செலுத்தியதன் விளைவாக, இந்தியாவில் கிராமப்புற சாலை இணைப்பு வசதி மேம்பட்டு, விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்பு என்ற நிலையிலிருந்து, விவசாயம் சாராத வேலைவாய்ப்பை அதிகரித்திருப்பதுடன், பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறி விவசாயப் பணிகளை கவனிக்கும் நிலை உருவாகி உள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
   • பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டம், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியிருப்பதுடன் பொருளாதார வாய்ப்புகளை எளிதில் அணுகுவதற்கு வழிவகுத்திருப்பதோடு, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்துள்ளதாக உலக வங்கி அறிக்கை பாராட்டியுள்ளது.
   • வீடுகளிலேயே குழந்தை பெறுவது வெகுவாகக் குறைந்திருப்பது, சுகாதாரத் துறையில் மாபெரும் முன்னேற்றம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

   டிடி இலவச டிஷ் மூலம் பங்களாதேஷ் மற்றும் தென்கொரியா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு

   • பங்களாதேஷ் டிவி நிறுவனத்திற்கு சொந்தமான பிடிவி வேர்ல்டு (BTV World) மற்றும் தென்கொரிய அரசின் 24 x 7 ஆங்கில தொலைக்காட்சியான கேபிஎஸ் வேர்ல்டு (KBS World) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் இலவச டிஷ் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
   • டிடி இந்தியா தொலைக்காட்சி சேவை பங்களாதேஷ் மற்றும் தென்கொரியாவில் ஒளிபரப்பு
   • இந்தியாவிற்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

   இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகள்

   • இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், ஜி-7, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளும், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலக நாடுகளின் தலைவர்களும் இந்தியாவுக்கு ஆதரவாக்க் குரல் கொடுத்துள்ளனர். இது போன்ற வல்லரசுகள், இந்தியாவின் நடவடிக்கைக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்திருப்பதுடன், அதற்கான இறையாண்மை இந்தியாவுக்கு உள்ளதென்றும் கூறியுள்ளன.

   சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை உயர்வு

   • இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்புறவை பலப்படுத்த பிரதமர் ஆற்றிய பங்களிப்புக்காக, ஐக்கிய அரபு அமீரக அரசின் மிகப் பெரிய சிவிலியன் விருதான “ஆர்டர் ஆப் சையத்” என்ற மதிப்புமிக்க விருது, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
   • பஹ்ரைன் நாட்டின் மாட்சிமைதங்கிய மன்னர், பிரதமர் திரு. நரேந்திர மோடி, மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டதற்காக “கிங் ஹமத் ஆர்டர் ஆப் தி ரெனைசன்ஸ்” என்ற விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.
   • இரு நாடுகள் இடையே சிறப்பு வாய்ந்த – முன்னுரிமை வாய்ந்த நீடித்த நட்புறவை மேம்படுத்தப் பாடுபட்டதற்காக, ரஷ்யாவின் மிக உயரிய விருதான, “ஆர்டர் ஆப் செயின்ட் ஆன்ட்ரூ தி அபோஸ்தல்” என்ற விருது அந்நாட்டு அரசு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

   உலகளாவிய கதைக்கு முன்னிலை வகிக்கும் இந்தியா

   மோடி – 2.0-வின் 100 நாட்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை

   • பிம்ஸ்டெக் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்த நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி தமது பதவியேற்பு விழாவிற்கு அழைத்தார்.
   • மாலத்தீவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்: மஜ்லிஸ்-ல் உரையாற்றிய பிரதமர் மோடி, வெளிநாட்டவருக்கான மிக உயரிய விருதான, தி ஆர்டர் ஆப் நிஷான் இஸ்ஷூதீன் விருதை பெற்றார்.

   இலங்கை பயணம்:

   • கடல்சார் முக்கியத்துவம் வாய்ந்த அண்டை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார். ஈஸ்டர் தினத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட புனித அந்தோணியா தேவாலயத்திற்குச் சென்றதன் மூலம், அங்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றார்.
   • இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே, தமிழர் கட்சிகளின் தலைவர்கள் என இலங்கையின் ஒட்டுமொத்த, தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.

   கிரிகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு:

   • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை 
    • மோடி, தீவிரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
    • கிர்கிஸ்தானுடனான இருதரப்பு நட்புறவை பலப்படுத்தும் விதமாக, அந்நாட்டு அதிபர் ஐீன்பெகோவ்-வுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தாய்நாட்டில் இருந்த போதும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை வரவேற்றப் பிரதமர் மோடி, வர்த்தகம், தீவிரவாதம் மற்றும் பிற பிரச்சனைகளில் இந்தியாவின் நிலைபாட்டைத் தெளிவுபடுத்தினார்.
    • ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் போதும், அதில் பங்கேற்ற அனைத்து முன்னணி உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
    • யோகா தினம், ஜூன் 21-ந் தேதியன்று உலகம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
    • குல்பூஷண் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு மிகவும் சாதகமான தீர்ப்பை வழங்கியது.

    யோகா தினம் – சர்வதேச அளவில் இந்தியாவின் அதிகாரத்தை மென்மையான முறையில் பிரதிபலித்தது

    • கடந்த சில ஆண்டுகளைப் போலவே, சர்வதேச யோகா தினம் 170-க்கும் மேற்பட்ட நாடுகளால் உலகெங்கிலும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் கலாச்சாரம் சர்வதேச அளவில் பிரபலமடைவதன் மூலம், நாட்டின் மென்மையான அதிகாரப் போக்கிற்கு பலன் கிடைத்தது.
    • இம்முறை, யோகா 2019-ஐ ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தலை சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்குப் பிரதமரின் விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
    • இந்த விருது பெற்ற 4 பேரில் ஒருவர் இத்தாலியப் பெண்மணி, மற்றொருவர் ஜப்பானைச் சேர்ந்த கலாச்சார அமைப்புக்குரியவர்.

    மாலத்தீவு-இந்தியா நட்புறவில் தலைகீழ் மாற்றம்

    புதிதாக ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள், பிரதமர் மோடி அண்டை நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

    அவரது மாலத்தீவு பயணத்தின் போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதற்குப் பிந்தைய நடவடிக்கைகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகளை பிரதமர் மோடி பின்பற்ற மாட்டார் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

    மாலத்தீவு அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதினைப் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தது.

    அண்டை நாடுகளுக்குத் தேவையானபோது உதவும் நண்பனாக

    முதலில் அண்டை நாடுகள் என்ற அணுகு முறை அயலுறவுக் கொள்கையில் அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கொடுமையான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், இலங்கைக்கு சென்ற முதல் உலகத்தலைவர் பிரதமர் மோடியாவார்.

    எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பேருரை

    பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றியதுடன் அதற்கு எதிராக உலக அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் அவரது முயற்சி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    பிஷ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் நாடுகளால் தூண்டப்படும் பயங்கரவாதப் பிரச்சனையை அவர் எழுப்பினார். பயங்கரவாதத்திற்கு ஊக்கமளித்து, நிதியுதவி அளித்து, தூண்டிவிடும் நாடுகள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இந்த அச்சுறுத்தலை சமாளிக்க  உலக அளவில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி – பரந்த பார்வை, எதிர்காலப் பயன்கள்

    நிகழ்ச்சிகள்

    பிரதமர் மோடி, ஜி – 20-ன் நான்கு அமர்வுகளில் கலந்து கொண்டார், ஒன்பது இருதரப்பு சந்திப்புகள், மாநாட்டிற்கு இடையிலான எட்டு சந்திப்புகள், இரண்டு முத்தரப்பு சந்திப்புகள் (ஜப்பான் – இந்தியா – அமெரிக்கா, ரஷ்யா – இந்தியா – சீனா) மற்றும் பிரிக்ஸ் தலைவர்களுடன் சந்திப்பு என  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

    ஜி-20 மாநாட்டின் போது உலகத்தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, நீண்ட இருதரப்புப் பேச்சுக்களிலும் கலந்து கொண்டார்.  உலக அரங்கில் இந்தியா எழுச்சியுறுவதை இது சுட்டிக் காட்டுகிறது.

    கோபேயில் மிகப் பெரிய சமுதாய நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இரண்டு நாட்களில் 25 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    பிரதமர் எழுப்பிய பிரச்சினைகள் உலக நாடுகளிடம் அதிர்வை உண்டாக்கின.

    ஜி – 20 உச்சிமாநாட்டில் சுகாதாரப் பராமரிப்பு குறித்துப் பிரதமர் மோடி உரையாற்றினார், இந்தியாவின் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மற்றும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் குறித்து அவர் விளக்கினார்.

    பேரிடர் மேலாண்மையில் ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சி தேவை என அவர் வலியுறுத்தினார்.

    பாலின சமத்துவத்தின் அவசியத்தைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். தொழில்நுட்பம் பற்றியும், மனிதகுல முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைப் சமுதாயங்கள், உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினார்.

    2019 ஜி – 20 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகும் பொருளாதாரக் குற்றவாளிகளைப் பிடிக்க ஒருங்கிணைந்த உத்தி தேவை என்று வலியுறுத்தினார்.

    ஊழல் இல்லாத உலகத்தை உருவாக்க 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி, தொடர்ந்து பிரச்சாரம் செய்தது தெளிவாகியிருக்கிறது. அதே சமயம் நேர்மையாக வரி செலுத்துவோரும், நேர்மையான தொழிலதிபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி, ஒசாகா பாதை விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை.  ஒசாகா ஜி – 20–ல், பிரதமர் அபேயின் முக்கிய நோக்கங்களாக தாராள தரவுப் புழக்கம், மின்னணு வர்த்தகம் ஆகியவை இருந்தன.

    பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் வலுவான குரலை எழுப்பினார்.

    ஜி -20, பிரிக்ஸ், அல்லது எஸ் சி ஓ என எந்த அமைப்பாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக விரிவாக உரையாற்றுவதில் பிரதமர்  மோடி முதன்மையானவராகத் திகழ்கிறார். ஒசாகா, ஜி-20, எந்த வித்தியாசமும் இல்லாதது.

    பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரசை, பிரதமர் மோடி வலியுறுத்தினார். அதற்கு முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

    இந்தியா மற்றும் அமெரிக்கா – நன்மை பயக்கும் நிகழ்வு

    பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்த போது ஊடகக் கண்காணிப்பு மிக அதிகமாகக் காணப்பட்டது.

    மோடி – ட்ரம்ப் இருதரப்பு சந்திப்பு சுமூகமாகவும், பயனளிக்க்கும் வகையிலும் இருந்தது. இரு தலைவர்களும் 5-ஜி, வர்த்தகம், ஈரான், பாதுகாப்பு உறவுகள் போன்ற பலதரப்பு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்தனர்.

    திட்டமிட்ட இருதரப்பு சந்திப்புகளுடன் கூடுதலாகப் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும், சாதாரண முறையில், கலந்துரையாடினர். ஜி-20 தலைவர்களின் இரவு விருந்து, பல்வேறு அமர்வுகள் இடையே, 

    தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.

    ஒருபக்கம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், மறுபக்கம் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டவர்களுடன் பிரதமர் மோடி சுற்றிச் சுழன்று பேச்சு நடத்தியதை ஜி-20 தலைவர்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களால் காணமுடிந்தது.

    முதலில் அண்டை நாடுகள் கொள்கை

    • நமது நம்பிக்கை மிக்க நட்பு மற்றும் பங்களிப்பு நாடான பூடானுக்குப் பயணம் (17-18, ஆகஸ்ட் 2019)
    • முதலில் அண்டை நாடுகள் என்ற இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா – பூட்டான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார்.
    • பிரதமர் மோடியும், பூட்டான் பிரதமர் டாக்டர் லோட்டே செரீங்கும், புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டனர். ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
    • மேலும் இந்திய – பூட்டான் நீர்மின்திட்ட ஒத்துழைப்புக்கான 720 மெகாவாட் மங்க்டேச்சு நீர் மின் திட்டத்தைப் பிரதமர் திரு மோடியும், பூட்டான் பிரதமர் திரு லோட்டேயும் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.
    • விண்வெளி ஒத்துழைப்பில் புதிய உச்சத்தை எட்டும் வகையில், இருவரும் திம்பு, தெற்காசிய செயற்கைக்கோள் நிலையத்தைக் கூட்டாகத் திறந்து வைத்தனர். இத்ன மூலம் தொலைதூர மருந்தியல், தொலைதூரக் கல்வி, வானிலை முன்னறிவிப்பு, இயற்கைப் பேரிடர்கள் குறித்த எச்சரிக்கை ஆகியவை இதன் மூலம் பூட்டானின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் கிடைக்க வழி ஏற்படும்.
    • பூட்டானுக்கான இந்தியாவின் தேசிய அறிவுக் கட்டமைப்பின் விரிவாக்கத்தை இருதலைவர்களும் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் இருநாடுகளையும் சேர்ந்த நிறுவனங்களிடையே நெருங்கிய ஒத்துழைப்பு உருவாக்கப்படும்.
    • பிரதமர் திரு நரேந்திர மோடி பூட்டானில் ரூபே அட்டைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    • டிஜிட்டல் பரிவர்த்தனை, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் நமது உறவை இது மேலும் வலுப்படுத்தும்.

    நரேந்திர மோடி @narendramodi – Aug.18

    நன்றி பூடான்!

    இதுவொரு மறக்க முடியாத பயணம். இயற்கை எழில்மிகுந்த நாட்டின் மக்கள் என் மீது காட்டிய பேரன்பை ஒருபோதும்  மறக்க முடியாது.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கவுரவம் எனக்குக்

    கிடைத்தது இந்தப் பயணத்தின் விளைவாக இருதரப்பு உறவு மேம்பட்டுள்ளது.

    பூடான் பிரதமர் @PMBhutan – Aug.17 இன்று மாலை கியாலாங்

    சோக்காங்கில் நடத்திய இந்த 3- வது இருதரப்பு சந்திப்பின் போது லியோன்சென் டாக்டர் லோட்டேஷெரிங்கும் திரு. நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இரு பிரதமர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    உலகெங்கும் விரிவடைந்த இந்தியாவின் ஆதிக்கம்

    • பிரதமரின் பிரான்ஸ் பயணம், நீடித்த நட்புறவை மேலும் வலுப்படுத்தியது (22 – 23 ஆகஸ்ட் 2019)
    • இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பு, ‘இன் – ஃபிரா’ கட்டமைப்பு துறை (IN-FRA) என்பதைக் குறிக்கும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
    • பிரான்ஸ்-இந்தியா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வலுவடைந்துள்ளது.
    • 2022-ல் விண்வெளிக்கு இந்தியா அனுப்ப உள்ள மனிதர்களைக் கொண்ட விண்கலத்தில் பயணம் செய்யவிருக்கும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு உதவும் வகையில், மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்தப் பயிற்சி பிரான்சிலும், இந்தியாவிலும் மேற்கொள்ளப்படும்.
    • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த விண்வெளிப் பருவநிலை ஆய்வகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

    விரிவுபடுத்தப்பட்ட அண்டை நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்துதல்

    அமீரகப் பிரதமரின் ஐக்கிய அரபு எமிரேட் பயணம்: இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும்

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூபே அட்டை சேவை 
     • தொடக்கம். வளைகுடா நாடுகளில் முதலாவதாக, இந்தியாவின் ரூபே அட்டை சேவையைத் தொடங்கியுள்ள நாடு இது.

     பிரதமரின் பஹ்ரைன் பயணம்

     • கலாச்சாரம், விண்வெளி, ஐ.எஸ்.ஏ மற்றும் ரூபே அட்டை ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
     • பஹ்ரைன் தேசிய விளையாட்டரங்கில் பெருந்திரளான இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்.
     • பஹ்ரைனின் மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீநாத்ஜி ஆலயப் புனரமைப்புப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
     • மனித நேயம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பஹ்ரைன் சிறைகளில் தண்டனை அனுபவித்த 250 இந்தியர்களை மன்னித்து பஹ்ரைன் அரசு விடுதலை செய்தது.

     ஜி-7 உச்சிமாநாடு:

     • சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொளவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம், தண்ணீர்ப் பற்றாக்குறை,   கடல் மாசுபாடு போன்றப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதில்  இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றார்.
     • டிஜிட்டல் மாற்றம் தொடர்பான சிறப்பு விவாத அரங்கைப் பிரதமர் மோடி முன்னெடுத்துச் சென்றார்.  சமூக சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியாவின் முன்முயற்சிகளை எடுத்துரைத்த அவர், அதிகாரமளித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமே இதனை சரி செய்ய முடியும் என்றார்.

     அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமருடன் இருதரப்பு சந்திப்பு

     • பிரான்சின் பியாரிட்ஸ் நகரில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன், இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளுக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்த இரு தலைவர்களும், எரிசக்தி மற்றும் வர்த்தகத் துறைகளில் அதிக கவனம் செலுத்தவும் முடிவு செய்தனர்.
     • ஜி-7 உச்சிமாநாட்டின் இடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும், பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் மற்றும்  முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். 

     டொனால்டு ஜெ ட்ரம்ப் @realDonladTrump-Aug26

     பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 மாநாட்டினரிடையே, எனது அருமை நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சற்று முன் ஒரு சிறப்பான சந்திப்பு நிறைவடைந்தது.

      விளாடிவோஸ்டோக்கிற்கு  பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் மோடி – ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

     • இந்தியா – ரஷ்யா 20-வது வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், கிழக்குப் பொருளாதார அமைப்பின் ஐந்தாவது உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவும், பிரதமர் திரு நரேந்திர மோடி ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியான விளாடிவோஸ்டோக் நகருக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
     • 20-வது வருடாந்தர உச்சிமாநாட்டில், இந்தியா – ரஷ்யா இடையேயான சிறப்பு வாய்ந்த மற்றும் நீடித்த நட்புறவு கணிசமாக வளர்ச்சியடைந்திருப்பதை இருதலைவர்களும் சுட்டிக்காட்டினர்.
     • அணுஎரிபொருள் விநியோக அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு, ரஷ்யா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியது. திருத்தியமைக்கப்பட்ட ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும், ரஷ்யாவின் ஆதரவு தொடரும் என்று உறுதி செய்யப்பட்டது.
     • இந்த உச்சிமாநாட்டின் போது 2019 – 24 காலக்கட்டத்தில் ஹைட்ரோ கார்பன் துறையில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தத் துறையில் ஒத்துழைப்புகளை அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதென இருதரப்பினரும் தீர்மானித்தனர்.
     • தீவிரவாதத்தைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென்ற உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.  பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையையும் ரஷ்யா பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
     மத்திய அரசின் 100 நாள் சாதனை

     இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தல் / துணிச்சலான முன்முயற்சிகள் மற்றும் உறுதியான செயல்பாடுகளின் 100 நாட்கள்.

     1. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் – ஜம்மு – காஷ்மீரை தேசிய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்தது.

      வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்ட மோடி அரசு, அரசியல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 35ஏ-யும் ரத்து செய்யப்பட்டது.

      மாநிலத்தின் சமூக – பொருளாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

     2. மாபெரும் பொருளாதார சீர்திருத்தங்கள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி.

      தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம்

     • இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற மோடி அரசு உறுதிபூண்டுள்ளது.

      பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. பொதுத்துறை வங்கிகள் மூலம் கூடுதல் கடன் விரிவாக்கம்:

      வங்கிகள் உரிய நேரத்தில் வட்டிக் குறைப்பை செயல்படுத்துதல்.

      வாகனத் தொழில்துறை ஊக்குவிப்பு

      அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை இறுதி செய்ய, அமைச்சங்களுக்கு இடையிலான நடவடிக்கைக் குழு ஒன்று உருவாக்கப்படும்.

     3. தொழில் தொடங்குவதை எளிமையாக்குதல்:

      பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு மீறல்கள் சமுதாயப் பொறுப்பாகக் கருதப்படும்.

      வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, துன்புறுத்தல்களைக் குறைக்கவும், ஒட்டு மொத்த செயல்பாட்டுக் கால அளவை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.

      வாடிக்கையாளர்களுக்கு உதவி: துன்புறுத்தல்களைக் குறைத்து செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க ஏதுவாக, பொதுத் துறை வங்கிகள் இனி, வாடிக்கையாளர்கள் தங்களது கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களைத் திருப்பித் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை அடமானம் வைத்த கடன்தாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

      குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை அனைத்தும் 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

      வரிவிதிப்பு – வருமானவரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், நிரந்தர கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ள மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. முக அடையாளம் இல்லாத முறையில் வரி செலுத்துவோரை ஆய்வு செய்தல். கூடுதலாக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. தொகையை திரும்பப் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

      ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை விற்று வரவை மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களுக்குமான பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்)வரி, 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

     4. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமூக நீதியை உறுதி செய்தல்

      திருமணமான இஸ்லாமியப் பெண்களுக்கு நிம்மதி – பிற்போக்கான முத்தலாக் நடைமுறை ஒழிப்பு.

      குழந்தைகள் உரிமையைப் பாதுகாத்தல்: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்தது மோடி அரசு. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டால், மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

      திருநங்கைகள் (உரிமைப் பாதுகாப்பு) சட்டம் 2019: திருநங்கைகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகுபாடு காட்டுவதைத் தடுப்பதோடு, திருநங்கைகளின் உரிமைகளை விளக்கியுள்ளது.

      ஊதியப் பாதுகாப்பை உறுதி செய்தல். ஊதிய விதிகள் 2019: மகளிர் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது

      பிரதமரின் சிறு வியாபாரிகள் ஓய்வூதியத் திட்டம் 2019: இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடி சிறு வணிகர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3000 கிடைக்க உத்தரவாதம்.

      நிதி முறைகேடுகளிலிருந்து ஏழைகளைப் பாதுகாத்தல்– முறைப்படுத்தப்படாத முதலீட்டுத் திட்டங்கள் தடைச் சட்டம் 2019.

     5. அனைவருக்கும் அதிகாரமளித்தல்

      வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் இதுவரை சென்றடையாதவர்களுக்கு சென்றடையச் செய்தல்

     • பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் மூலம், 2019-20 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 1.95 கோடி வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.

     • நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2022 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும், மின்சார இணைப்பு மற்றும் தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதை அரசு உறுதி செய்யும்.

     • ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம், 2024-க்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும்.

     • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் – பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் மூலம் 16,085 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, இதுவரை 41 லட்சம் பேர் சிகிச்சை பெற்றிருப்பதுடன், 10 கோடி ஈ-அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. (செப்டம்பர் 2, 2019 வரை)

     • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 20,622 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

     • குறிப்பிடத்தக்க சாதனையாக, பிரதமரின் உஜ்வாலா (சமையல் எரிவாயு) திட்டத்தின் மூலம், 100 நாட்களில் 8 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 100 நாட்களில் 80 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

     6. பழங்குடியினர் நலன்

     • 150 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, பழங்குடியின மாணவர்களுக்கு, தரமான கல்வி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. 55 பள்ளிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

     • வன நிதித் திட்டம் – பாரம்பரிய வன உற்பத்திப் பொருட்கள் / பிற பொருட்கள், வன நிதி நல மையங்கள மூலமாக மதிப்பு கூட்டப்படுவதுடன்; பழங்குடியினருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் உருவாக்கப் பயிற்சி வழங்கப்படும். நாகாலாந்து, ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 123 வன நிதி நல மையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     7. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

      பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டித்ததன் மூலம், மொத்தப் பயனாளிகள் எண்ணிக்கை 6.37 கோடியாக அதிகரித்துள்ளது.

      அன்னமிடுவோரின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான ஓய்வூதியத் திட்டம் – பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதல் 3 ஆண்டுகளிலேயே 5 கோடி சிறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

      கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலைகளை பாதுகாத்திட: 40 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை இருப்பு வைத்தல். உபரி இருப்பை வெளியேற்றுவதற்கான சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கை.

      கரீஃப் பயிர்களுக்குக் கூடுதலான குறைந்தபட்ச ஆதரவு விலை

      புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் வழியே பிரதமரின் கிசான் உர்ஜா சுரக்ஷ் எவம் உத்தான் மகாபியான் திட்டத்தின் மூலம் சூரிய மின்சக்தி 

     தயாரிப்பின் நலன்கள் விவசாயிகளுக்கு கிட்டிட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

     8. தண்ணீர்ப் பாதுகாப்பை நோக்கி

      தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மோடி அரசு ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது.

      மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் ஆதரவுடன் முன்னுரிமைப் பணிகள் ஜல் சக்தி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

     9. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எந்திரம் – ரயில்வே துறைக்கு ஊக்கம்

      மோடி அரசின் 2-வது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறையை நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்திரமாக மாற்றுவதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – 2030-க்குள் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

      இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே துறை, பயணிகள் பாதுகாப்பில் சாதனை – 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்பட்ட ரயில் விபத்துக்களில் உயிரிழப்பு ஏதுமில்லை.

      தில்லி – மும்பை, தில்லி – ஹவுரா வழித்தடங்களில், 2022-23-க்குள் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டராக அதிகரிக்க ஒப்புதல்.

     10. நல்ல ஆளுகை

      வெளிப்படைத்தன்மைக்கு ஊக்கம் – ஊழல் ஒழிப்பு – அடிப்படை விதி 56 (ஜே) –ன் கீழ், பொது நலன் கருதி ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.

      பட்ஜெட் கூட்டத் தொடர் 2019 – பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்.

      மக்களின் வாழ்வையும், தொழில் முன்னெடுப்பையும் எளிதாக்கிட 58 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

      புதுமைகளைப் புகுத்தும் நாடுகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான சர்வதேச பட்டியலில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி, 52-வது இடத்தில் உள்ளது.

     11. தீவிரவாதத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

      தேசியப் புலனாய்வு முகமை சட்டம், திருத்தச் சட்டம் 2019-ன் கீழ் விசாரிக்கப்படும் தீவிரவாத வழக்குகளில், சொத்துக்களைக் கைப்பற்ற / முடக்கி வைக்க தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம்.

      தேசியப் புலனாய்வு முகமை சட்டம், திருத்தச் சட்டம் 2019-ன் கீழ் தேசியப் புலனாய்வு முகமைக்கு, எல்லை தாண்டிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

     12. மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019-ன் மூலம் மோடி அரசு சாலைப்பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

      நாட்டில் பாதுகாப்பான, ஊழலற்ற, திறமையான போக்குவரத்து நடைமுறையை ஏற்படுத்த வழி வகுக்கும் மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்துள்ளது.

     13. மின் வாகனங்களுக்கு ஊக்கம்

      மின்சார வாகனங்கள், வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியான விலையில் கிடைக்கும வகையில், அதன் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

      மின்சார வாகனங்களை வாங்குவதற்குப் பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்திய வட்டி மீது, ரூ.1.5 லட்சம் அளவுக்குக் கூடுதல் வருமானவரி கழிவு.

     14. உடல் தகுதி இந்தியா இயக்கம்

      தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, உடல் தகுதி இந்தியா இயக்கத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில், உடல் தகுதியை அங்கமாக்குவதுடன், அவர்களை உடல் தகுதி நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்த இயக்கம்.

     15. சந்திரயான்-2 விண்கலம்

      உலக நாடுகளில் முதன்முறையாக நிலவின் தென்துருவத்தை அடைந்து அங்கே நீர் இருக்கிறதா என ஆய்வு செய்ய இந்தியாவால் அனுப்பப்பட்டது சந்திரயான் – 2 விண்கலம்.

      விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தாலும் சந்திரயான்-2 ஆர்பிட்டர், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நன்றாக இயங்கி வருவதாகவும், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

     16. பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறைகள்

      மிகப்பெரிய ராணுவ சீர்திருத்தமாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது சுதந்திர தின உரையில், முப்படைத் தளபதி பதவி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

      அப்பாச்சி ஹெலிகாப்டர்களை சேர்த்தல்

     17. இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகள்

      இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், ஜி-7, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளும், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலக நாடுகளின் தலைவர்களும் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். இது போன்ற வல்லரசுகள், இந்தியாவின் நடவடிக்கைக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்திருப்பதுடன், அதற்கான இறையாண்மை இந்தியாவுக்கு உள்ளதென்றும் கூறியுள்ளன.

      யோகா தினம், 170 நாடுகளில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு சர்வதேச அளவில் இந்தியாவின் அதிகாரத்தை மென்மையான முறையில் பிரதிபலித்தது.

     18. சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை உயர்வு

      இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்புறவை பலப்படுத்த பிரதமர் ஆற்றிய பங்களிப்புக்காக, ஐக்கிய அரபு அமீரக அரசின் மிகப் பெரிய சிவிலியன் விருதான “ஆர்டர் ஆப் சையத்” என்ற மதிப்புமிக்க விருது, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

      பஹ்ரைன் நாட்டின் மாட்சிமைதங்கிய மன்னர், பிரதமர் திரு. நரேந்திர மோடி, மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டதற்காக “கிங் ஹமத் ஆர்டர் ஆப் தி ரெனைசன்ஸ்” என்ற விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.

      இரு நாடுகள் இடையே சிறப்பு வாய்ந்த – முன்னுரிமை வாய்ந்த நீடித்த நட்புறவை மேம்படுத்தப் பாடுபட்டதற்காக, ரஷ்யாவின் மிக உயரிய விருதான, “ஆர்டர் ஆப் செயின்ட் ஆன்ட்ரூ தி அபோஸ்தல்” என்ற விருது அந்நாட்டு அரசு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

     19. உலகளாவிய கருத்தாக்கத்தில் முன்னிலை வகிக்கும் இந்தியா

      நமது நம்பிக்கை மிக்க நட்பு மற்றும் பங்களிப்பு நாடான பூடானுக்குப் பயணம் (17-18, ஆகஸ்ட் 2019)

      பிரதமரின் பிரான்ஸ் பயணம், நீடித்த நட்புறவை மேலும் வலுப்படுத்தியது (22 – 23 ஆகஸ்ட் 2019)

      ஐக்கிய அரபு எமிரேட்டில் ரூபே கார்டு சேவை தொடக்கம். வளைகுடா நாடுகளில் முதலாவதாக, இந்தியாவின் ரூபே கார்டு சேவையை தொடங்கியுள்ள நாடு இது.

      பஹ்ரைன் தேசிய விளையாட்டரங்கில் பெருந்திரளாக, திரண்ட இந்திய சமுதாயத்தினரிடையே உரையாற்றினார்.

      ஜி-7 உச்சிமாநாடு: சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொளவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, உயிரி பண்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், தண்ணீர் அழுத்தம் & பெருங்கடல் மாசுபாடு போன்றவற்றைக் குறைப்பதில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

      ஜி-7 உச்சிமாநாட்டின் போது, அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமருடன் இந்திய பிரதமரின் இருதரப்பு சந்திப்பு.

      விளாடிவோஸ்டோக்கிற்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் மோடி – ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதைப் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *