மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பை போலவே கவிதை போன்ற காதலை சொல்லும்

ஆண்சன்  பால் , ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பை போல வே கவிதை போன்ற காதலை சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே  காதலர்களின் நெருக்கத்தை,  ஆழமான காதலை அழுத்தி சொல்வதாய் அமைந்துள்ளது

அறிமுக இயக்குநர் T. சுரேஷ் குமார் படம் குறித்து  கூறியதாவது…

இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான  கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான்  வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள். உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள்

B. ராஜேஷ் குமார் மற்றும்
ஶ்ரீவித்யா ஆகியோர்  Rajsree ventures சார்பில் “மழையில்
நனைகிறேன்” படத்தை தயாரிக்கிறார்கள். முன்னணி பாத்திரங்களில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிக்க முக்கிய பாத்திரங்களில் ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு,
வெற்றிவேல் ராஜா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள்

வசனம் – விஜி, கெவின் பாண்டியன்

இசை – விஷ்ணு பிரசாத்

ஒளிப்பதிவு – J. கல்யாண்

எடிட்டிங் – G.B. வெங்கடேஷ்

கலை – N. மகேந்திரன்

பாடல்கள் – லலிதானந்த், முத்தமிழ்

உடை வடிவமைப்பு – ஶ்ரீவித்யா ராஜேஷ்

சண்டைப்பயிற்சி – T. ரமேஷ்

ஸ்டில்ஸ் – P.M. கார்த்திக்

 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *