ஹிட்டான ‘அழியாத கோலங்கள் 2’ பாட்டு – இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவை பாராட்டிய வைரமுத்து

ஹிட்டான ‘அழியாத கோலங்கள் 2’  பாட்டு –   இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவை பாராட்டிய வைரமுத்து

காவியத்தலைவன், முற்றுகை, வள்ளி, வரப்போறா ராஜாளி ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் அரவிந்த் சித்தார்த்தா. சின்னத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார். பக்தி  பாடல்கள் குறும்படங்கள் டாகுமெண்டரி படங்கள் என இவர் இசை அமைத்தவை ஏராளம்.  

எம்.ஆர்.பாரதி, இயக்கத்தில் 29ஆம் தேதி வெளியாக உள்ள ‘அழியாத கோலங்கள் 2’ படத்திற்கும் இசை இவர்தான். படத்தில் ஒரு பாடல் தான் என்றாலும் அந்த ஒருபாடலை மக்கள் கட்டாயம் கேட்டு ரசித்து மகிழ்வார்கள். கவிஞர் வைரமுத்து இந்த பாடலின் வரிகளில் தனிக்கவனம் செலுத்திஉள்ளார்.

பின்னணி பாடகி சித்ரா அவர் பாடிய பல ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. பின்னணி இசையிலும் தனக்கென ஒரு முத்திரையை இதில் பதித்துள்ளார்.வசனங்ளின் மேல் இசையின் ஆதிக்கத்தை கொண்டு வராமல் தேவையான இடத்தில் படத்தின் காட்சிகளுக்கு உதவும் வகையில் இசையமைத்துள்ளது இன்றைய படங்களில் இருந்து இவரை நிச்சயம் வித்தியாசப்படுத்தி காட்டும். படத்தின் அடுத்த பின்னணிஇசை எப்போது வரும் என்ற எதிரபார்ப்பை கொண்டு வருவது இவரது இசை பரிமாணத்தின் வெற்றி.

மெல்லிசை மாமன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் பாடல்கள் போல் ஜனரஞ்சகமான காலத்தால் அழியாத நல்ல மெலோடிக்களை கொடுக்க வேண்டும் என்பது இவரது ஆசை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *