ரஜினிகாந்த் முதல்வராக வரவேண்டும் என்பது ரசிகர்களின் 30 வருட கனவு. மக்கள் எண்ணமும் அதுவாக இருக்கும்.

‘ரஜினிகாந்த் முதல்வராக வரவேண்டும் என்பது ரசிகர்களின் 30 வருட கனவு. மக்கள் மனத்தை வெல்வதற்கு மட்டுமல்லாமல், கட்டுக்கோப்பாக நிர்வாகத்தை நடத்துவதற்கும்கூட, ரஜினிகாந்த் போன்ற கவர்ச்சிமிக்க தலைவரால் மட்டும்தான் முடியும்.

காமராஜரும் பதவி ஆசை இல்லாதவர்தான். அவரோடு உடனிருந்தவர்கள் வற்புறுத்திதான் அவரைப் பதவியில் அமரவைத்தார்கள். அப்படிப்பட்டவரால்தான் தமிழகத்தில் பொற்கால ஆட்சியைத் தரமுடிந்தது.

அதேபோல், தலைவர் ரஜினிகாந்த்துக்கு இன்றைக்குப் பதவி ஆசை இல்லாமல் இருக்கலாம். ஆனால், கோடிக்கணக்கிலான ரசிகர்களில் ஒருவனாக எனக்கும் அவரை முதல்வராகப் பார்க்கத்தான் ஆசை. எனவே, ரசிகர்களாகிய எங்களின் வற்புறுத்தல்களுக்கு இணங்கி ரஜினிகாந்தும், முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். தேர்தலில் வென்று, தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சியைத் தரவேண்டும்’ என்பதுதான் என் ஆசையும்கூட” என்றார்.

– நடிகர் ஜீவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *