இளையராஜாவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் மரியாதை

இளையராஜாவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் மரியாதை!

இளையராஜாவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் மரியாதை!

ஒட்டு மொத்த தமிழர்களையும் தனது இசையால் கட்டிப்போட்டிருக்கும்இளையராஜாவுக்கு மத்திர அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி, அவரிடம் ஆசி பெற்று வருகிறார்கள்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசிப்பெற்றனர். மேலும், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவிடம் ஆசிப்பெற்றனர்.

சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் பாலேஸ்வர், செயலாளர் கார்த்திக், பொருளாளர் மதிஒளி குமார் உள்ளிட்டவர்களோடு பிற நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் இளையராஜாவுக்கு மாலை போட்டு, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *