
பிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்*
*பிரம்மாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்*
முன்னோக்கிய கதைக்களங்கள் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. அப்படி வெளியான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது முன்னோக்கிய கதைக்களம் ஒன்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.
எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. 'கலியுகம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர்.
இதில் பிரதான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்