Tag: மதுர வீரனில்’ ஷண்முகப் பாண்டியனுக்கு ஜோடியான கேரள புதுமுகம் மீனாட்சி..!

மதுர வீரனில்’ ஷண்முகப் பாண்டியனுக்கு ஜோடியான கேரள புதுமுகம் மீனாட்சி..!

மதுர வீரனில்’ ஷண்முகப் பாண்டியனுக்கு ஜோடியான கேரள புதுமுகம் மீனாட்சி..!

Cinema News
விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து இயக்குநர் பி.ஜி.முத்தையா இயக்கி வரும் திரைப்படம் ‘மதுர வீரன்.’  இந்தப் படத்தின் நாயகியைத் தேடி கேரளமெங்கும்   கதாநாயகி வேட்டை நடத்தியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. இறுதியாக கேரளாவில் காயம்குளம் என்ற ஊரிலிருந்து  மீனாட்சியை கண்டெடுத்தார்.  இந்த மீனாட்சி ஏற்கெனவே மலையாள இயக்குநர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கிய ‘திங்கள் முதல் வெள்ளிவரை’ என்கிற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர். அந்த படத்தில் மீனாட்சியின் நடிப்பு மீடியாவால் மிகவும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தில் மீனாட்சியுடன் நடித்திருந்த நடிகர் ஜெயராம் மீனாட்சியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அந்தப் பாராட்டு தனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாக நினைக்கும் மீனாட்சிக்கு இந்த ‘மதுர வீரன்’ படத்தில் நடித்தக் காட்சிகளைப் பார்த்து கேப்டன் விஜய்காந்தும் பாராட